சினிமா

சென்னையை சாக்கடை நகரமாக மாற்றிவிட்டோம்: கமல் வருத்தம்

சென்னை நகரம் உருவாக்கப்பட்டு 375 ஆண்டுகள் ஆனதையொட்டி கமல் அறிக்கை வெளியிட்டார். அதில்,‘ஒரு கடற்கரை கிராமமாக தொடங்கி, கிழக்கிந்திய கம்பெனி, போர்த்துகீசியர், டச்சு, பிரெஞ்சு போன்ற பலர் படையெடுத்து வெல்ல முயன்று கடைசியில் ஆங்கிலேயர் தக்க வைத்துக்கொண்ட ஒரு அழகான தீவு. இரண்டாற்றின் கரை என்று ஸ்ரீரங்கத்தை சொல்வார்கள். சென்னையும் இரண்டாற்றின் கரைதான். அதற்கு இன்று 375 வயதாகி இருக்கிறது. இந்த இளம் தாயை, இரு நதி கொண்ட இரண்டாற்றின் கரையாகிய இந்த ஊரை, இரண்டு சாக்கடைகள்… Continue reading சென்னையை சாக்கடை நகரமாக மாற்றிவிட்டோம்: கமல் வருத்தம்

சினிமா

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம் – கமல்ஹாசன் இரங்கல்

ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் ராபின் வில்லியம்ஸ் கலிபோர்னியாவில் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவர் தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலைச் செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணதிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள செய்தியில், நகைச்சுவை நடிகர்கள் சமூகத்தின் விமர்சகர்கள். அவர்கள் தங்களின் கோபத்தை நகைச்சுவையால் மறைக்கின்றனர். ஆண்கள் அழுவதற்கு மரியாதையைக்… Continue reading ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம் – கமல்ஹாசன் இரங்கல்

சினிமா

உத்தமவில்லன் – எக்ஸ்க்ளூசிவ்

உத்தம வில்லன்’ திரைப்படத்தில், ‘உத்தமன்’ என்ற 8ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிக்கிறார். மனோரஞ்சனைக் கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய குருவாக சினிமா இயக்குனராக கே. பாலசந்தர் நடிக்கிறார்.  மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குனர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள். 8ம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனில் நடக்கும் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும்,… Continue reading உத்தமவில்லன் – எக்ஸ்க்ளூசிவ்

சினிமா

கமலின் உத்தம வில்லன் : முதல் பார்வை

லிங்குசாமி, கமல்ஹாசன் இணந்த தயாரிப்பில் உருவாகிவரும் உத்தம வில்லன் முதல் பார்வை விளம்பரங்கள் இன்று வெளியிடப்பட்டன. நாளை முதல் டிரெய்லர் வெளியாகிறது. நடிகர் கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். இசை ஜிப்ரான்.