சினிமா, சின்னத்திரை, பெண் இயக்குநர்

கமர்ஷியல் படம் இயக்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!

குணசித்திர நடிகையாக பெயர் எடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோகணம் என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டிய இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல படம் என்று பெயர் வாங்கியது. அதற்குப் பிறகு ஜீ தமிழின் பிரபல டாக் ஷோவான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பாளரானார். தற்போது கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் லட்சுமி. படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.