அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

அமலாக்கத் துறை வழக்கு : ராசா ஆஜர்; ஆஜராகாத கனிமொழிக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு அடிப்படையில் இன்று விசாரணை துவங்கியது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா மற்றும் அமிர்தம் ஆகியோர் நேரில் ஆஜராகினர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அடுத்த வழக்கு விசாரணைக்கு கனிமொழி உள்ளிட்டோர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்… Continue reading அமலாக்கத் துறை வழக்கு : ராசா ஆஜர்; ஆஜராகாத கனிமொழிக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

அரசியல், இந்தியா, தமிழ்நாடு

2ஜி: கூடுதல் சாட்சிகளை சேர்க்க நீதிமன்றத்தில் கனிமொழி, சரத் குமார் எதிர்ப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட சிலரை சேர்க்க, சிபிஐக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான கனிமொழி, சிபிஐ மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார். அதில்,… Continue reading 2ஜி: கூடுதல் சாட்சிகளை சேர்க்க நீதிமன்றத்தில் கனிமொழி, சரத் குமார் எதிர்ப்பு

அரசியல், இந்தியா

கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் என்ன ஆனார்? மாநிலங்களவையில் கனிமொழி கேள்வி

இன்று மாநிலங்களவையில் பேசிய கனிமொழி, தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில், அவரை மீட்க அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து கேட்டார். ஈராக்கில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட 41 இந்தியர்களின் நிலை குறித்தும் அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க அனைத்துவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக… Continue reading கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் என்ன ஆனார்? மாநிலங்களவையில் கனிமொழி கேள்வி