கண்காட்சி, செய்து பாருங்கள், வீட்டை அலங்கரித்தல்

வீட்டை அலங்கரித்தல் – குத்து விளக்குடன் செராமிக் கலைப்பொருட்கள்

சமீபத்தில் சென்னை லலித்கலா அகாடமியில் இந்தோ கொரியன் கலைஞர்களின் செராமிக் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு கலைஞர் குத்துவிளக்கின் அடிப்பாகத்தைப் பயன்படுத்தி மேலே செராமிக்கால் ஆன தட்டுகளால் அலங்கரித்திருந்தார். தட்டின் மேல் கோலங்கள் வரையப்பட்டிருந்தன. பார்க்க மிக அருமையாக இருந்தது.

கறுப்பு வெள்ளை சினிமா, சினிமா

சிவாஜி பற்றி ஜெமினி எழுதி வைத்த குறிப்பு!

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடி வரும் நிலையில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நூற்றாண்டு விழாவை பல்வேறு வகையில் கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரி விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் மாணவர்களும், அண்ணா பல்கலைக்கழக மீடியா கம்யூனிகேஷன்ஸ் மாணவர்களும் இணைந்து முதல்முறையாக ‘பிளாஷ்பேக்’ என்ற பெயரில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட கண்காட்சியை நடத்துகிறார்கள். சென்னையில் 15 முதல் 21வரை நடக்கிறது இது குறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் வெங்கியிடம் கேட்டபோது, ‘‘இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் நேரத்தில்… Continue reading சிவாஜி பற்றி ஜெமினி எழுதி வைத்த குறிப்பு!

கண்காட்சி

உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓவியப் பெண்கள்!

’’பெண்களின் உள்மனதில் என்ன இருக்கிறது என்று சொல்லவே முடியாது என்பார்கள். பெண்களின் உள்மனதை அறிய அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். பெண்களின் உணர்வுகளை வகைப்படுத்துவதையும் அவை எந்த வகையில் பெண்களை சமூகத்துடன் பிணைக்கின்றன என்பதையும் ஓவியங்கள் வழியே காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.” என்கிறார் லதா. சென்னை சோழமண்டல ஓவியக் கலைஞரான லதா, ‘பக்தி’ என்கிற தலைப்பில் தன் ஓவியங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். சென்னை தட்சிணசித்ராவில் வரும் ஆகஸ்ட் 20ந் தேதி முதல் 31 வரை இந்த ஓவியக் கண்காட்சி நடக்கவிருக்கிறது.

கண்காட்சி, தட்சிணசித்ரா, பட்டுப்புடவை

நீங்கள் புடைவை பிரியரா?

நவீன உடைகள் பல வந்தாலும் புடைவைக்கு இருக்கும் புகழே தனிதான். புடைவைப் பிரியர்களுக்காகவே தட்சிணசித்ரா, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் ஆகஸ்ட் 2 மற்றும் 3ந் தேதிகளில் பிரத்யேக கண்காட்சி நடத்துகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற புடைவை வடிவமைப்பாளர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் சென்று பாருங்கள்... காட்சி நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.