எம்பிராய்டரி, செய்து பாருங்கள்

எம்பிராய்டரி: லெய்சி டெய்சி தையல் போடுவது எப்படி?

பூ டிசைனை போடுவதற்கு ஏற்ற எம்பிராய்டரி இந்த லெய்சி டெய்சி தையல். கொடுத்து இருக்கும் பூ டிசைனை உங்களுக்கு விருப்பமான துணியில் வரைந்து கொள்ளுங்கள். ஊசியில் நூலைக் கோர்த்து, துணியின் கீழிருந்து குத்தி, டிசைன் கோட்டின் மேலே இழுத்துக் கொள்ளுங்கள். மேலிழுத்த நூலை இடது கைப் பெருவிரலால் துணியோடு அழுந்தப் பிடித்தவாறே, முதலில் ஆரம்பித்த புள்ளியிலேயே மீண்டும் ஊசியைக் குத்தி , டிசைன் கோட்டிலேயே சிறிது இடைவெளி விட்டு ஊசியை வெளியே இழுக்க வேண்டும். அப்படி இழுத்தால்… Continue reading எம்பிராய்டரி: லெய்சி டெய்சி தையல் போடுவது எப்படி?

Advertisements
எம்பிராய்டரி

ஃபிரென்ச் நாட் எம்பிராய்டரி போடுவது எப்படி?

எம்பிராய்டரிகளில் நவீன உடையலங்காரங்களில் பயன்படுத்த ஏற்றது ஃபிரென்ச் நாட்! இந்த எம்பிராய்டரி எப்படி போடுவது என்று பார்ப்போம். முதலில் உங்களுக்கு விருப்பமான டிசைனை துணியில் வரைந்து கொள்ளுங்கள். ஊசியில் நூலைக் கோர்த்து டிசைனின் ஆரம்பத்தில் கீழிருந்து குத்தி மேலே இழுத்துக் கொள்ளுங்கள் . அப்படி இழுத்த நூலை இடது கையால் ஊசிக்கு மிக அருகில் பிடித்துக் கொண்டு நூலை ஊசியில் மூன்று முறை வட்டமாக சுற்றி கொண்டே வர வேண்டும். மூன்று முறை சுற்றி முடித்தவுடன், நூலைக்… Continue reading ஃபிரென்ச் நாட் எம்பிராய்டரி போடுவது எப்படி?

எம்பிராய்டரி, குரோஷா, செய்து பாருங்கள், தையல் கலை, நீங்களும் செய்யலாம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்

நீங்களும் பின்னலாம் குரோஷா!

  காட்டுவாசிகளாகத் திரிந்த ஆதி மனிதர்களான நம் பாட்டியும் தாத்தாவும் தங்களுக்கு ஆடை வேண்டுமென்று உணர்ந்து, இலைகளை தாவரக் கொடிகளில் சேர்த்து கோர்த்து உடுத்தியபோதே தோன்றியதுதான் இந்த தையல் கலை! அந்தக் காலத்தில் அவர்கள் விலங்குகளின் எலும்பிலிருந்து ஊசிகளை உருவாக்கி ஆடைகளைத் தைத்ததாக, தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த எலும்பு ஊசிகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அன்று அவர்கள் பயன்படுத்திய ஊசிதான் இன்று மாடர்ன் ஊசியாக பரிணாம வளர்ச்சியடைந்து நிற்கிறது. அதேபோல் அவர்கள் கண்டுபிடித்த தையல்கலை மெதுமெதுவாக உருமாறி இன்று… Continue reading நீங்களும் பின்னலாம் குரோஷா!

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

செய்து பாருங்கள்: தமிழில் கைவினைப் பொருள் செய்முறைக்கான முதல் இதழ்!

தமிழில் கைவினைப் பொருள் செய்முறைக்கான முதல் இதழைக் கொண்டுவந்துள்ளோம். இதழின் பெயர் ‘செய்து பாருங்கள்’.  முதல் இதழான ஜனவரி-மார்ச் 2017 இதழில் எம்பிராய்டரி, ஃபேப்ரிக் பெயிண்டிங், குரோஷா, சோப் மேக்கிங், சாக்லேட் மேக்கிங், ஃபேஷன் ஜுவல்லரி, ஒரிகாமி என பல பிரிவுகளில் 20க்கும் அதிகமான கைவினைப் பொருட்கள் செய்முறை குறிப்புகள் விளக்கமாக தரப்பட்டுள்ளது. இந்த துறை சார்ந்தவ விருப்பமுள்ளவர்களை நிச்சயம் இதழ் ஏமாற்றாது. முதல் இதழின் விலை ரூ. 150.  இரண்டாம் இதழ் ரூ. 60.  ஆண்டு சந்தா… Continue reading செய்து பாருங்கள்: தமிழில் கைவினைப் பொருள் செய்முறைக்கான முதல் இதழ்!

கைவேலை பயிற்சி, பெண் கலைஞர்கள், பெண் தொழில் முனைவு

வீட்டிலிருந்தபடியே கைவேலை செய்யும் பெண்களின் சிறப்பு கண்காட்சி!

வீட்டிலிருந்தபடியே சிறு சிறு கைவேலைகள் செய்யும் பெண்கள் இணைந்து சென்னை சிபி ஆர்ட் செண்டரில் கண்காட்சி அமைத்துள்ளனர். பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்தக் கண்காட்சி, கைவேலைப்பாடு தெரிந்த பெண்களுக்கு அவற்றை எப்படி சந்தைப் படுத்துவது என்பது பற்றி தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.  இளம் பெண்கள் முதல் நடுத்தர, முதிய பெண்கள் வரை அனைத்து வயதுகளிலும் உள்ள பெண்கள் ஆர்வமுடன் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று இருக்கிறார். நான்கு பெண்கள் தளத்தில் கைவேலைப்பாடுகள் கற்றுத்தரும் ஜெயஸ்ரீ நாராயணன் தன்னுடைய… Continue reading வீட்டிலிருந்தபடியே கைவேலை செய்யும் பெண்களின் சிறப்பு கண்காட்சி!