அரசியல், இந்தியா, தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு 152 அடியாக உயர்த்தியே தீரும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி "செயல்படுகிற ஆட்சி சீக்கிரம் வருமா?' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்குப் பதிலளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் திமுக அங்கம் வகித்த முந்தைய மத்திய அரசும், திமுகவும்… Continue reading முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, Uncategorized

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: பாதுகாப்புப் பணியில் 6000 போலீசார்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளதை முன்னிட்டு தமிழக -கர்நாடக எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வரவுள்ளதால் தமிழக - கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் தமிழகத்திலிருந்து ஏராளமான கட்சித் தொண்டர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக… Continue reading ஜெ. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: பாதுகாப்புப் பணியில் 6000 போலீசார்

இன்றைய முதன்மை செய்திகள், ஊடகம், சின்னத்திரை, தமிழ்நாடு

இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ்

மூன்றாம் பாலினமான திருநங்கைகள் சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் ஒதுக்கப்படும் நிலையில், தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் லோட்டஸ் டிவி என்ற தொலைக்காட்சியில் திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். 31 வயதாகும் பத்மினி பிரகாஷ் என்ற இந்தத் திருநங்கை கடந்த ஒரு மாதமாக இந்தத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிவருகிறார். தமிழ் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை, திருநங்கைகள் திரையில் வருவது என்பது புதிதல்ல. ஏற்கனவே ரோஸ் என்ற திருநங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கியுள்ளார். ஆனால் செய்தித் தொலைக்காட்சியில் ஒருவர்… Continue reading இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ்

அரசியல், இந்தியா

பதவி விலகும்படி உள்துறை செயலாளர் மிரட்டல்: ஆளுநர் அஜீஸ் குரேஷி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஆளுநர் பதவியில் இருந்து நீக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை எதிர்த்து உத்தரகண்ட் ஆளுநர் அஜீஸ் குரேஷி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கும், ஆளுநர்களை மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக உள்துறை செயலாளர் கோஸ்வாமிக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவிக்கு வந்ததும், ஐமு கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை பதவி விலகும்படி உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி கேட்டுக் கொண்டார். அதையடுத்து, எம்.கே. நாராயணன் (மேற்கு வங்கம்),… Continue reading பதவி விலகும்படி உள்துறை செயலாளர் மிரட்டல்: ஆளுநர் அஜீஸ் குரேஷி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அரசியல், இந்தியா, சுற்றுச்சூழல்

விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘கெயில்’ முறையீடு

இயற்கை எரிவாயு விநியோகத் திட்டத்தின்படி, தமிழக விளை நிலங்களில் குழாய்கள் பதித்ததற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், அவற்றை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ‘கெயில்' நிறுவனம் கேட்டது. எனினும், "வாய்மொழியாக விடுத்த இந்த வேண்டுகோளை முறைப்படி மனுவாகத் தாக்கல் செய்தால் கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்று உச்ச நீதிமன்றம் கூறியது. கேரளத்தில் இருந்து கர்நாடகத்துக்கு தமிழகம் வழியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த ஆண்டு திட்டமிட்டது. அத்திட்டத்தின்படி,… Continue reading விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘கெயில்’ முறையீடு