குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

இனிப்பு பூரண கொழுக்கட்டை: எளிய செய்முறை

அரிசியில் இட்லி, தோசை மட்டும்தான் எப்போதும் செய்ய வேண்டும் என்பதில்லை. அதோடு, அரிசி மாவு தயாரிக்க உளுந்து, ப. அரிசி, பு. அரிசி தேவைப்படும் பொருட்களும் அதிகம் இவற்றுக்கு தொட்டுக்கொள்ள ஏதாவது கட்டாயம் செய்தாக வேண்டும். அதற்கு மாற்றாக அதே நேரம் சத்து நிறைந்த ஒன்றாக கொழுக்கட்டை உள்ளது. இதை செய்வது இட்லி தோசையைவிட எளிது. இதோ அந்த எளிய செய்முறை. முதலில் அரை கிலோ பச்சரிசியை கழுவி நன்றாக நிழலில் உலர்த்திக் கொள்ளுங்கள். உலர்ந்ததை மெஷினில்… Continue reading இனிப்பு பூரண கொழுக்கட்டை: எளிய செய்முறை

Advertisements
காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

முட்டைகோஸ் மசாலா கூட்டு!

காய்கறிகளின் வரலாறு – 28 முட்டைகோஸ் போர்த்துக்கீசியர்களால் 14 அல்லது 17ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காய் முட்டைகோஸ். வரலாற்றாசிரியர்கள் முட்டைகோஸின் பிறப்பிடம் பாறை மலைகள் சூழ்ந்த ஐரோப்பிய பிரதேசங்களாக இருக்கலாம் என்கிறார்கள். ஐரோப்பியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறி என்றாலும் இன்று சீனாவுக்கு அடுத்தபடியாக முட்டைகோஸ் விளைச்சலில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அதேபோன்று இந்திய உணவுகளிலும் முட்டைகோஸ் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எது நல்ல முட்டைகோஸ்? முட்டைகோஸ் விளையும்போது பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு ஆளாகக்கூடியது.… Continue reading முட்டைகோஸ் மசாலா கூட்டு!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

போர்த்துக்கீசியர் கொண்டுவந்த காலிஃபிளவர்!

காய்கறிகளின் வரலாறு – 27 காலிஃபிளவர் இன்றைய துருக்கியின் ஒரு பகுதியான ஆசியா மைனரை பூர்வீகமாகக் கொண்டது காலிஃபிளவர். கிபி 600களில் இத்தாலியில் பரவி, 16ம் நூற்றாண்டில் மற்ற நாடுகளில் காலிஃபிளவரின் பயன்பாடு பரவியது. போர்த்துக்கீசியர் மூலமாகவே காலிஃபிளவரும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. காலிஃபிளவர், முட்டைகோஸ், பிரக்கோலி மூன்றும் ஒரே இனத்தைச் சேர்ந்த காய்கறிகள். இலைகளுக்குள் தோன்றும் அகன்ற பூவே சமையலுக்கு உகந்ததாக பயன்படுத்தப்படுகிறது. காலிஃபிளவரை தேர்ந்தெடுப்பது எப்படி? காலிஃபிளவரில் வெண்மை, இளம் மஞ்சள்,… Continue reading போர்த்துக்கீசியர் கொண்டுவந்த காலிஃபிளவர்!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பீன்ஸ் தேங்காய் பால் கூட்டுடன் வரலாறு

காய்கறிகளின் வரலாறு – 26 பீன்ஸ் தென் அமெரிக்க நாடான பெருவை பூர்விகமாகக் கொண்ட பீன்ஸ், ஐரோப்பியர்கள் மூலம் மற்ற நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஐரோப்பியர்களால் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று பீன்ஸ்.இன்று சீனா, இந்தோனேஷியா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் பீன்ஸை உற்பத்தி செய்கிறது. மலைப் பிரதேசங்களில் விளையும் செடிவகையிலிருந்து கிடைக்கும் இளம் காய்களே உணவில் பயன்படுத்தப்படுகின்றன. சமைக்காமலும் சமைத்தும் இந்தக் காய் உணவாகிறது. சிறந்த பீன்ஸை இனம் காண்பது எப்படி? இளம் காய்களே… Continue reading பீன்ஸ் தேங்காய் பால் கூட்டுடன் வரலாறு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

கோடை ஸ்பெஷல் – வெண்டைக்காய் பச்சடி

காய்கறிகளின் வரலாறு – 25 வெண்டைக்காய் ஆசிய, ஆப்பிரிக்க வெப்ப மண்டல மழைப் பொழியும் பகுதிகளில் விளையக்கூடிய காய்கறி வெண்டைக்காய். பொதுவாக வழங்கப்படும் ஒக்ரா என்கிற சொல் ஆப்பிரிக்க மூலச் சொல்லிருந்து வந்தது. அதனால் இதை ஆப்பிரிக்கர்களே முதலில் இதை உண்ணத் தொடங்கியிருக்கலாம். இன்று உலகம் முழுவதிலும் இந்தக் காயை உண்கிறார்கள். இந்தியா வெண்டைக்காய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ளது. பச்சை நிறத்தில் மட்டுமல்லாது வெளிர் ஊதா நிறத்திலும் வெண்டைக்காய் உற்பத்தியாகிறது. பொதுவாக தக்காளியில்… Continue reading கோடை ஸ்பெஷல் – வெண்டைக்காய் பச்சடி