செல்வ களஞ்சியமே- 93 ரஞ்சனி நாராயணன் சில குழந்தைகள் எல்லோருடனும் சுலபமாகப் பழகுகின்றன. சில வெளி மனிதர்களைப் பார்த்தால் அம்மாவின் பின்னாலோ அப்பாவின் பின்னாலோ போய் ஒளிந்து கொள்ளும். சிறு குழந்தையாய் இருக்கும்போது பரவாயில்லை. இதே கூச்ச சுபாவம் பெரியவனாக ஆன பின்பும் தொடர்ந்தால் குழந்தைக்கே அது நல்லதல்ல. அம்மாவோ அப்பாவோ தனிமை விரும்பியாக இருந்தால் குழந்தையும் அப்படி இருக்கலாம். சில பெற்றோர்கள் ‘என் பெண் மூடி டைப். யாருடனும் பேசமாட்டாள்’ என்று பெருமையாகவும் சொல்லிக் கொள்வார்கள்.… Continue reading உங்கள் குழந்தை மூடி டைப்பா?!
குறிச்சொல்: இன்றைய முதன்மை செய்திகள் r
“முட்டையிலிருந்து என்ன வரும்?”
ஞா.கலையரசி காட்டுயிர் எழுத்தாளர் திரு சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘வானில் பறக்கும் புள்ளெலாம்,’ நூலை அண்மையில் வாசித்தேன். உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன் ஆகிய இதழ்களில் இவர் எழுதிய சுற்றுச்சூழல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உயிர்மை வெளியீடு. இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2014. இவர் காட்டுயிர், சூழலியல், திரைப்பட வரலாறு ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். சூழலியல் வரிசையில் இது இவருடைய மூன்றாவது நூல். ஒரு முறை ஆறு வயது சிறுமியிடம் முட்டையைக் காட்டி, “முட்டையிலிருந்து என்ன… Continue reading “முட்டையிலிருந்து என்ன வரும்?”
‘யார் என்ன நினைத்தால் எனக்கென்ன?’
செல்வ களஞ்சியமே- 92 ரஞ்சனி நாராயணன் சமீபத்தில் ஒரு திருமணத்திற்காக மும்பை சென்றிருந்தோம். நாங்கள் எல்லோரும் வெளியூரிலிருந்து வந்திருந்ததினால் எங்களுக்கு தங்குவதற்கு ஒரு ஹோட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பல நாட்களுக்குப் பின் கூடியிருந்ததால், நாங்கள் எல்லோரும் ஒரே அறையில் உட்கார்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் உறவினரின் பேரன் அந்த அறையில் போடப்பட்டிருந்த கட்டிலின் மேல் இருந்த வெள்ளைவெளேரென்ற படுக்கை விரிப்பின் மீது தான் கொண்டு வந்திருந்த கலர் பென்சில்களினால் கிறுக்கத் தொடங்கினான். சிறுவனின் பெரியப்பா அவனை கோபித்துக்… Continue reading ‘யார் என்ன நினைத்தால் எனக்கென்ன?’
ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள்- உண்மை அறியும் குழு அறிக்கை
அ. மார்க்ஸ் சென்ற ஏப்ரல் 7 அதிகாலையில் திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் வேலைதேடிச் சென்ற 20 தொழிலாளிகள் ஆந்திர சிறப்புக் காவல் படையால் (APRSASTF - AndhraPradesh Red Sanders Anti Smuggling Task Force) சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக மக்களைமட்டுமின்றி, மனிதாபிமானம் மிக்க அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொல்லப்பட்டஅனைவரும் வேலை தேடிப் போனவர்கள், கைகளில் ஆயுதங்களோடோ, நெஞ்சில் குறிப்பான அரசியல்நோக்கங்களோடோ பயணம் செய்தவர்களல்ல என்பதும் எல்லாத் தரப்பினர் மத்தியிலும், இது போன்றசந்தர்ப்பங்களில் ஏற்படுவதைக்… Continue reading ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள்- உண்மை அறியும் குழு அறிக்கை
முடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்
ஞா.கலையரசி முடக்கத்தான் கீரையின் தாவரப் பெயர் - Cardiospermum halicacabum மூட்டு வலியை இது குணமாக்குகிறது; எனவே தான் இதன் பெயர் முடக்கற்றான் என்பது நம் மக்களின் நீண்ட கால நம்பிக்கை. பழந்தமிழகத்தில் இதற்கு உழிஞைக் கொடி என்று பெயர்; நாட்டு மருத்துவத்தில், தமிழர் பயன்படுத்தி வரும் முக்கிய தாவரங்கள் என்ற அட்டவணையில் இது இடம் பெற்றிருக்கின்றது. (ஆதாரம் - தாவரவியல் அறிஞர், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தமிழரும் தாவரமும்’) இதன் காய்கள் முப்பட்டை வடிவத்தில் பலூன்… Continue reading முடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்