இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குற்றம், தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம் பெண் கொலை

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஆர்.கே பேட்டை அருகே பாறை குட்டையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது கிடந்ததைப் பார்த்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.  முதற்கட்ட விசாரணையில், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை… Continue reading திருவள்ளூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம் பெண் கொலை

இந்தியா, இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

பெங்களூரில் 3 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி ஆசிரியர் மீது புகார்

பெங்களூரில் தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வரும் 3 வயது சிறுமியை அப்பள்ளி ஆசிரியர் பலாத்காரம் செய்ததாக அச்சிறுமியின் தந்தை புகார் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து ஆத்திரமடைந்த மற்ற பெற்றோர்களும்  அப்பள்ளியை முற்றுகையிட்டனர்.  இதனையடுத்து  பள்ளிக்கு சென்ற பெங்களூரு ஆணையர் எம்.என். ரெட்டி, விசாரணைக்கு உத்தரவிட்டார்.  பள்ளியில்… Continue reading பெங்களூரில் 3 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி ஆசிரியர் மீது புகார்

இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தமிழ்நாடு

சென்னையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கு: சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்

சென்னை எழும்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த மனநல மருத்துவர் எம்மா, கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்த தங்க, வைர நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக எழும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலை நடந்து 3 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்பட்டவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி.… Continue reading சென்னையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கு: சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்

அரசியல், இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

திருட்டு வழக்கில் கைதான பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர்

உடுமலைப்பேட்டையில் காவல்துறையினர் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண் கைதியை காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சம்பவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுமலைப்பேட்டையில் திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சந்திரா என்ற பெண் காவல்துறையினரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திராவின் மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட பெண்ணை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சந்திரா இன்று பிற்பகல்… Continue reading திருட்டு வழக்கில் கைதான பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர்

இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தமிழ்நாடு

குடிகாரக் கணவனால் மனைவி தீக்குளித்து தற்கொலை

மேடவாக்கம் அருகே வடக்குப்பட்டு அண்ணாமலை நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (25). இத் தம்பதியின் மகன் சஞ்சய் (3). மஞ்சுளா அந்தப் பகுதியில் வீட்டுவேலை செய்து வந்தார். மாரிமுத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மாரிமுத்து திங்கள்கிழமை இரவு அதிகமாக மது அருந்திவிட்டு மஞ்சுளாவிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் விரக்தியடைந்த மஞ்சுளா தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி… Continue reading குடிகாரக் கணவனால் மனைவி தீக்குளித்து தற்கொலை