அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணி!

"மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு மதச்சார்பற்ற, ஜனநாயக முன்னணி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துச் செல்லும்'' என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். விஜயவாடாவில் தொடங்கிய ஆந்திரப் பிரதேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு நாள் மாநாட்டில் அவர் இது குறித்து பேசினார்... 'தனியார்மயத்தை ஊக்குவித்தல், அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, பொதுத்துறை… Continue reading பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணி!

அரசியல், இந்தியா

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாரண்ட் இல்லாமல் கைது; 2 ஆண்டுகள் சிறை!

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுக்கப்படுவதை கடும் குற்றமாகக் கருதி 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் விதமாக புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும், வாக்காளர்களுக்குப் பணம், மது, வீட்டு உபயோகப் பொருள்கள், இதர பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுப்பது குறித்து தேர்தல்… Continue reading வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாரண்ட் இல்லாமல் கைது; 2 ஆண்டுகள் சிறை!

அரசியல், இந்தியா, சர்ச்சை

கிரண் பேடியை விட ஷாஜியா இல்மியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்: மார்க்கண்டே கட்ஜூ

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர் ஷாஜியா இல்மி. இவரையும், டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியையும் ஒப்பிட்டு, முன்னாள் பத்திரிகை கவுன்சில் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளரான கிரண் பேடியை விட அழகாக உள்ளார். ஆகையால் கிரண்பேடிக்கு  பதிலாக ஷாஜியா இல்மி நிறுத்தப்பட்டால் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்று… Continue reading கிரண் பேடியை விட ஷாஜியா இல்மியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்: மார்க்கண்டே கட்ஜூ

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, Uncategorized

ஜெயந்தி நடராஜன் vs ராகுல் காந்தி: நடந்தது என்ன?

ஜெயந்தி நடராஜன், முன்னாள் தமிழக முதல்வர் பக்தவச்சலத்தின் பேத்தி. நான்கு தலைமுறைகளாக இவர்களுடைய குடும்பம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறது. ராஜீவ்காந்தி கொலைப் பின் வெளிச்சத்துக்கு வந்தவர் ஜெயந்தி நடராஜன். அதன் பிறகு, காங்கிரஸ் பிளவுபட்டபோது மூப்பனாருடன் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்து அமைச்சரானார். தமிழ் மாநில காங்கிரஸ், தாய்க் கட்சியுடன் இணைந்தபோது சோனியாவின் கவனம் பெற்றார் ஜெயந்தி. வழக்கறிஞராகவும், ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்த ஜெயந்தி காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக சிறப்பாக செயல்பட்டார். இதற்காக தேடிவந்தது சுற்றுச்சூழல்… Continue reading ஜெயந்தி நடராஜன் vs ராகுல் காந்தி: நடந்தது என்ன?

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை

குடியரசு தினவிழா சர்ச்சைகள்!

தமிழக அரசு நேற்று கொண்டாடிய குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பறைசாற்றும்விதமாக வாகன அணிவகுப்பு நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, 'குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது அவமானகரமானது; இந்தியாவுக்கு இழுக்கு என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேபோல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் கிரண்பேடி,… Continue reading குடியரசு தினவிழா சர்ச்சைகள்!