சினிமா, நடிகர்கள்

ஒரு குப்பைக்கதையின் ஹீரோ நடன இயக்குநர் தினேஷ்!

ஃபிலிம்பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் "ஒரு குப்பைக்கதை" ஸ்ரீகாந்த் நடித்த "பாகன்" படத்தினை இயக்கிய அஸ்லம் தயாரிக்கிறார். நடன இயக்குனர் தினேஷ் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் ஏறக்குறைய 130 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியவர். "ஆடுகளம்" படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்மிடம் பேசிய தினேஷ் கூறியதாவது, "மிக அழுத்தமான எனக்கும் பொருத்தமான கதை என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நிறைய பேர் என்னை இதற்கு முன் அணுகியிருந்தாலும்… Continue reading ஒரு குப்பைக்கதையின் ஹீரோ நடன இயக்குநர் தினேஷ்!

சினிமா

இரண்டு கதாநாயகர்கள் தமிழ் சினிமாவின் புது டிரெண்ட்!

இரண்டு கதாநாயகர்கள் சேர்ந்து நடித்தால் படம் ஓடாது என்கிற தமிழ் சினிமா செண்டிமெண்டையெல்லாம் சமீப கால படங்கள் தகர்த்தெறிந்துவிட்டன. இரண்டு கதாநாயகர்கள் என்கிற நிலைமை போய், மூன்று, நான்கு பேர் சேர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் வந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,என்றென்றும் புன்னகை,ஜில்லா, வீரம் படங்கள் இதற்கு உதாரணம். அந்த வரிசையில் புலிவால் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் விமல், பிரசன்னா கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அனன்யா, இனியா, ஓவியா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இரண்டு இளைஞர்கள் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத… Continue reading இரண்டு கதாநாயகர்கள் தமிழ் சினிமாவின் புது டிரெண்ட்!

சினிமா, சினிமா இசை

மீண்டும் பாடகர் ஹரிஹரன்!

2000த்தின் ஆரம்ப வருடங்களில் தமிழ் சினிமா பாடகர்களில் கோலோச்சியவர் பாடகர் ஹரிஹரன். சமீப வருடங்களில் தமிழ் சினிமாவில் அவருடைய பாடல்களை அதிகம் கேட்க முடியவில்லை. நீண்ல இடைவேளைக்குப் பிறகு தற்போது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் 'ஏனென்றால் உன் பிறந்த நாள்' என்ற மெலோடி பாடலைப் பாடி, மீண்டும் தன்னுடைய குரலால் ரசிகர்களை வசப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் வந்த மற்றொரு திரைப்படமான பொன்மாலைப் பொழுது படத்தில் ‘அடிக்கடி’ என்ற பாடியிருக்கிறார். இதுவும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோலிவுட், சினிமா

கோலிவுட்டின் நம்பிக்கை நாயகிகள்!

கொஞ்சம் சினிமா பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் போதுதான் கதாநாயகிகள் பேசப்படுவது வழக்கம். இப்படிப்பட்ட படங்களில் கவர்ச்சிக்காக மட்டுமே கதாநாயகிகள் பயன்படுத்தப் படுவார்கள். ஆனால் கோலிவுட்டில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் சின்ன பட்ஜெட், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதல் படத்திலேயே நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கி விடுகிறார்கள். இன்னொரு மாற்றமும்கூட நடந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில சின்ன கேரக்டர்களில் நடித்த நடிகைகள், கதாநாயகிகளாகவும் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 'சூது கவ்வும்' படத்தின் நாயகி ஷஞ்சிதா ஷெட்டி… Continue reading கோலிவுட்டின் நம்பிக்கை நாயகிகள்!