சினிமா, தமிழ்நாடு

பாடல் திருட்டு: ஆணையரிடம் இளையராஜா புகார்

தனது பாடல்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கமாறு காவல்துறை ஆணையர் இளையராஜா புகார் அளித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் அவருடைய சட்ட ஆலோசகர் பிரதீப்குமார், சென்னை காவல்துறை ஆணையர்  ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவின் விவரம்: "நான் தியாகராயநகர் முருகேசன் தெருவில் வசித்து வருகிறேன். நான் தமிழ் திரைப்பட உலகில் கடந்த 40 ஆண்டுகளாக இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன்.இந்நிலையில், நான் இசையமைத்து பதிவு செய்கின்ற பாடல்களை எனது அனுமதியின்றி வேறு எந்த நிறுவனங்களுக்கும், சி.டி.க்களாகவோ,… Continue reading பாடல் திருட்டு: ஆணையரிடம் இளையராஜா புகார்

இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர்கள், தமிழ்நாடு

ஜெயமோகனின் வெண்முரசு: இளையராஜாவின் புகழாரமும் ஞாநியின் விமர்சனமும்

மகாபாரத்தை நாவல் வடிவில் எழுதுவதன் மூலம், திரைத் துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ள நிலையில் விமர்சகர் ஞாநி நாவல் குறித்து முரண்பட்ட கருத்தை வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் "வெண்முரசு' எனும் பெயரில் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். மொத்தம் 30 ஆயிரம் பக்கங்களில், 30 நாவல்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நாவல் வரிசையாக "வெண்முரசு' எதிர்காலத்தில் விளங்க வேண்டும்… Continue reading ஜெயமோகனின் வெண்முரசு: இளையராஜாவின் புகழாரமும் ஞாநியின் விமர்சனமும்