சிறப்பு கட்டுரைகள்

கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை!

ஆஸியெனும் அதிசயத்தீவு – 3 (வல்லபி) கீதா மதிவாணன் கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? இதோ அந்தக் கதை! மிகவும் இளகிய மனம் படைத்த கங்காரு ஒன்றும் அதன் குட்டியும் ஒரு காட்டில் வசித்துவந்தார்களாம். கங்காருவின் குட்டி சரியான வாலுக்குட்டியாம். அது ஒரு இடத்தில் இல்லாமல் எங்காவது ஓடிக்கொண்டே இருக்க, அம்மா வேட்டைக்காரர்களிடமிருந்தும் மற்ற எதிரிகளிடமிருந்தும் அதைக் காப்பாற்ற அதன் பின்னால் ஓடிக்கொண்டே இருக்குமாம். எத்தனை முறை எடுத்துச்சொன்னாலும் குட்டி அம்மா… Continue reading கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை!

Advertisements
ஆஸ்திரேலியா வரலாறு

கங்காரு எப்படி பைக்குள் வைத்து குட்டியை வளர்க்கிறது?

ஆஸியெனும் அதிசயத்தீவு – 2 கீதா மதிவாணன் ஆஸ்திரேலியா ஒரு அழகிய தீவு மட்டுமல்ல, பற்பல அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த நாடு. மழைக்காடுகள், சதுப்புநிலக்காடுகள், ஊசியிலை மரக்காடுகள், யூகலிப்டஸ் மரக்காடுகள், சவான்னா புல்வெளிகள், மலைகள், மலைத்தொடர்கள், பாலைவனம் என பல்வேறு விதமான நிலப்பரப்புகளை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 45% பாலைநிலம்தான் என்றால் நம்பமுடிகிறதா? அப்பாலையிலும் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன என்பது சிறப்பு. மாறுபட்ட நிலப்பரப்புக்கும் சூழலுக்கும் ஏற்ப வாழும் தனித்துவமிக்க தாவரங்களும் உயிரினங்களும் ஆஸ்திரேலியாவின்… Continue reading கங்காரு எப்படி பைக்குள் வைத்து குட்டியை வளர்க்கிறது?

வரலாறு

ஆஸியெனும் அதிசயத்தீவு!

மண்ணின் மைந்தர்கள் கீதா மதிவாணன் “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”  என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப நான் வந்துசேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவைப் பற்றி நான் கண்ட, கேட்ட, அறிந்த, ரசித்த, வியந்த, என்னை பாதித்த பல தகவல்களையும் இங்கு உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஆஸ்திரேலியா என்றால் இன்றைக்கிருக்கும் நவநாகரிக நாட்டைத்தான் பலருக்கும் தெரியும். ஆனால் இந்த மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிகளைப் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆஸ்திரேலியாவைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் ஆஸ்திரேலியப் பூர்வகுடியினரைப் பற்றி… Continue reading ஆஸியெனும் அதிசயத்தீவு!

அரசியல், உலகம்

ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை

ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா,  நார்வே நாடுகளில் இருந்து இறைச்சி, காய்கறிகள், பால் பொருட்கள், பழங்கள் போன்றவற்றின் இறக்குமதிக்கு ரஷ்யா தடைவிதித்துள்ளது.  இன்று முதல் அமலுக்கு வரும் இந்தத் தடை ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என ரஷ்ய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உள்ளாட்டு உணவு உற்பத்தி ஊக்குவிக்கவே இந்தத் த்டை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் பிரச்னையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப் போவதாக மிரடிக் கொண்டிருந்த வேலையில், ரஷ்யாவின்… Continue reading ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை

உலகம், வணிகம்

25 ஆண்டுகளுக்குப் பின் தங்க உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சியது ரஷ்யா!

25 ஆண்டுகளுக்குப் பிறகு தங்க உற்பத்தியில் அமெரிக்காவை முறியடித்துள்ளது ரஷ்யா. சீனா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த படியாக தற்போது மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது ரஷ்யா. 2013 ஆம் ஆண்டில் 254 241 டன் தங்கத்தை உற்பத்தி செய்திருப்பதாக ரஷ்ய தங்க உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவில் தங்கம், இயற்கை எரிவாயு, இயற்கை எண்ணெய் போன்றவை புவியியல் கண்டுபிடிப்புகளாக கொள்ளப்படுவதால் அவற்றிற்கு வரி விதிப்பதில்லை. கடந்த 5 வருடங்களில் 270 கனிம சுரங்கங்களை கண்டுபிடித்துள்ளது ரஷ்யா.