சினிமா

நடிகை கீத்து மோகந்தாஸ் இயக்கிய படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!

2015-ஆம் ஆண்டுக்கான 87-ஆவது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் "லயர்ஸ் டைஸ்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகை கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நவாஸூதீன் சித்திக், கீதாஞ்சலி தாபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்திய-திபெத்திய எல்லைப்புற கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாய், காணாமல் போன தனது கணவனைத் தேடி தனது இளவயது மகளுடன் டெல்லிக்குச் செல்கிறாள். வழியில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்வுப்பூர்வமாகக் கூறுவதே "லயர்ஸ் டைஸ்' திரைப்படத்தின் கதை.… Continue reading நடிகை கீத்து மோகந்தாஸ் இயக்கிய படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!

சினிமா

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம் – கமல்ஹாசன் இரங்கல்

ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் ராபின் வில்லியம்ஸ் கலிபோர்னியாவில் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவர் தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலைச் செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணதிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள செய்தியில், நகைச்சுவை நடிகர்கள் சமூகத்தின் விமர்சகர்கள். அவர்கள் தங்களின் கோபத்தை நகைச்சுவையால் மறைக்கின்றனர். ஆண்கள் அழுவதற்கு மரியாதையைக்… Continue reading ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம் – கமல்ஹாசன் இரங்கல்

சினிமா, விருது

ஆஸ்கர் – கென்ய நடிகை லுபிடா நியாங்க் விருது பெற்றார்

பிரசித்திபெற்ற ஆஸ்கர் விருது நிகழ்வு தற்சமயம் நடந்து வருகிறது. முதல் விருதாக சிறந்த ஒலியமைப்புக்கான விருது கிராவிட்டி படத்திற்கு வழங்கப்பட்டது. அமெரிக்க அடிமைகள் வாழ்வை சித்தரித்த 12 இயர்ஸ் ஆஃப் ஸ்லேவ் படத்தில் நடித்த கென்ய நடிகை லுபிடா நியாங்க், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.  சிறந்த துணை நடிகருக்கான விருது டல்லஸ் பையர்ஸ் கிளப் படத்தில் நடித்த ஜெரெட் லெட்டோவுக்கு வழங்கப்பட்டது.