சினிமா

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே: முதல் பார்வை

முதல் திரைப்படமான ஆரோகணம் மூலம் கவனத்தை ஈர்த்த, நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் இயக்கும் இரண்டாவது திரைப்படம் நெருங்கி வா முத்தமிடாதே. ஏ.வீ.ஏ நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை ஏ.வீ அனூப் தயாரிக்கிறார். ஷபீர் கலரக்கல் கதை நாயகனாகவும் பியா பாஜ்பாய் கதாநாயகியாகவும் நடிக்க லூசியா புகழ் சுருதி ஹரிஹரன், தம்பி ராமைய்யா, ஒய்.ஜி மகேந்திரன், அம்பிகா, ஏ.எல் அழகப்பன், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய பெட்ரோல் தட்டுப்பாடு என்பது மைய… Continue reading லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே: முதல் பார்வை

சினிமா, சின்னத்திரை, பெண் இயக்குநர்

கமர்ஷியல் படம் இயக்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!

குணசித்திர நடிகையாக பெயர் எடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோகணம் என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டிய இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல படம் என்று பெயர் வாங்கியது. அதற்குப் பிறகு ஜீ தமிழின் பிரபல டாக் ஷோவான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பாளரானார். தற்போது கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் லட்சுமி. படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.