சினிமா

தனுஷ் வெவ்வேறு தோற்றங்களில் தோன்றி கலக்கும் “அனேகன்”

கல்பாத்தி எஸ். அகோரம் வழங்கும் “ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மென்ட்” நிறுவனம், “அனேகன்” என்ற தமிழ்ப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் இயக்கத்தில், விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் பல புதுமைகளைக் காணலாம். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் கதாநாயனாக நடித்திருக்கிறார். ஓர் இடைவேளைக்குப் பிறகு, வெள்ளித்திரையில் தன் முத்திரையை மீண்டும் அழுத்தமாகப் பதிக்கும் விதத்தில், மிக முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கிறார், நவசர நாயகன் கார்த்திக். மும்பையைச்… Continue reading தனுஷ் வெவ்வேறு தோற்றங்களில் தோன்றி கலக்கும் “அனேகன்”

சினிமா

ஹிந்தி படம் இயக்கும் விஷ்ணுவர்தன்

பில்லா ரீமேக், ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இப்போது ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் “யட்சன்” என்ற படத்தை இயக்குவதோடு ஹிந்தியில் படம் இயக்கவுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பை தெரிவிப்பதாக கூறினார்.

சினிமா

என்ன மனுஷன் இவர்! அஜீத் பற்றி நெகிழ்கிறார் பாலா

பொங்கல் படமாக வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'வீரம்'.இப்படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்துள்ள நடிகர் பாலாவுக்கு இத்தனை நாளாக நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த நெருடலை 'வீரம்' பட வெற்றி அறுவை சிகிச்சை இல்லாமேலேயே அகற்றியிருக்கிறது. இந்த பாலா நம் மண்ணின் மைந்தன். தமிழில்தான் 'அன்பு' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 'காதல்கிசுகிசு' 'அம்மா அப்பா செல்லம்' போன்ற சில படங்களில் நடித்தார். இங்கே படங்கள் வெற்றி பெறாததால் மலையாளப் பக்கம் போனார். 'பிக்'பி' என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடன்… Continue reading என்ன மனுஷன் இவர்! அஜீத் பற்றி நெகிழ்கிறார் பாலா

சினிமா

நடிகர் கிருஷ்ணாவுக்கு திருமணம்!

கற்றது களவு, அலிபாபா, கழுகு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் கிருஷ்ணா. இவர் தற்போது திரைக்கு வர உள்ள வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதை தவிர விழித்திரு, இல்ல ஆனாலும் இருக்கு, வன்மம் போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர்கள் பட்டியல் சேகர் -  மதுபாலா ஆகியோரின் இளைய மகன். அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தனின் சகோதரர். நடிகர்… Continue reading நடிகர் கிருஷ்ணாவுக்கு திருமணம்!

சினிமா

சிம்புவின் வாலு எப்போ ரிலீஸ்?

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு, ஹன்சிகா, சந்தானம்,விடிவி கணேஷ் நடிக்கும் வாலு இந்த தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அஜீத்தின் ஆரம்பம் ரிலீஸ் ஆகப்போவதை அறிந்து, அவர் மேல் இருக்கும் அபிமானத்தின் காரணமாக சிம்பு தன்படத்தின் ரிலீஸை தள்ளிவைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே படத்தின் விளம்பர யுத்தியாக சிம்பு, ஹன்சிகா காதல் என பரப்படுவதும் நடக்கிறது. நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிவரும் வாலு, பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார். படக்குழு என்ன நினைக்கிறதோ?