இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்களிலேயே மிகப்பெரிய பறவையின் புதைபடிமத்தை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் தெற்கு கரோலினா கடற்பரப்பில் இந்த புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமத்தை விரிவாக ஆராய்ந்ததில், மிகப்பெரிய பறவையின் பாதுகாக்கப்பட்ட எச்சங்களை அதில் இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த பறவைகள் தனது இறக்கைகளை விரித்தால் அதன் அகலம் ஆறு மீட்டர் முதல் ஏழறை மீட்டர் வரை இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். தற்போது உயிர்வாழும் பறவைகளிலேயே அல்பட்ராஸ் என்னும் கடற்பறவைதான் மிகப்பெரிய பறவையாக… Continue reading டைனோசர் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய பறவையின் புதைபடிமம் கண்டுபிடிப்பு!
Tag: ஆய்வு
மணிமேகலை இயற்றப்பட்ட காலம் : ஓர் சர்ச்சை
புத்தம் ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி (அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் கட்டுரைகளை பகுதி கட்டுரைகளாக பிரசுரித்து வருகிறோம். இந்த நூலின் பின் இணைப்புகளை கடந்த மூன்று பகுதிகளில் பார்த்தோம் அதன் தொடர்ச்சி…) மணிமேகலை நூலின் காலம் மணிமேகலையின் காலத்தை ஆதாரத்துடன் ஆராய்ந்து எழுதுவதென்றால் அது பெரியதோர் தனி நூலாக முடியும். ஆதலின், மிகச் சுருக்கமாக எழுதுவோம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை என்பதே… Continue reading மணிமேகலை இயற்றப்பட்ட காலம் : ஓர் சர்ச்சை
த மு எ க ச வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை நீங்களும் வெல்லலாம்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கீழ்க்கண்ட பரிசுகளுக்கான நூல்கள் /தகடுகள் வரவேற்கப்படுகின்றன. 2013இல் அச்சாகி வெளியான நூல்கள் ஒவ்வொரு பரிசுக்கும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். குறும்பட ஆவணப்படங்களுக்கான பரிசுக்கும் 2013இல் வெளியான படங்களின் சிடி அல்லது டிவிடி இரு பிரதிகள் அனுப்ப வேண்டும். எழுத்தாளர்/இயக்குநர் மற்றும் பதிப்பாளர்/ படத் தயாரிப்பாளரின் முழு முகவரி தொலைபேசி எண்ணுடன் புத்தகங்களுடன்/தகடுகளுடன் எழுதி அனுப்பிட வேண்டுகிறோம். அனுப்ப வேண்டிய முகவரி: பொதுச்செயலாளர், தமிழ்நாடு… Continue reading த மு எ க ச வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை நீங்களும் வெல்லலாம்!