அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

மீண்டும் டெல்லி முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியதும் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 64 இடங்களில் தற்போது முன்னியில் உள்ளது. ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 14 ம் தேதி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் கடந்த முறை, அதே தேதியில் ராஜினாமா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தன்… Continue reading மீண்டும் டெல்லி முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்!

அரசியல், இந்தியா

பின் வாசல் வழியாக டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் வெறும் 49 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சியை கலைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இதைதொடர்ந்து கடந்த பிப்ரவரி முதல் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில், தனிபெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில்… Continue reading பின் வாசல் வழியாக டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

அரசியல், அரசியல் பேசுவோம்

தேர்தலில் நிற்பது கேவலமான செய்கையா? : சுப. உதயகுமாரன்

அரசியல் பேசுவோம் மக்களவை தேர்தலில் பங்கெடுக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி(எளிய மக்கள் கட்சி)யில் இணைந்திருக்கும் இடிந்தகரை போராட்டக்குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமாரன் மற்றும மை.பா. ஜேசுராஜ் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் விளக்கம் தரும் வகையில் தங்களுடைய நிலையை கேள்வி, பதில் மாதிரியில் விளக்கியிருக்கிறார் சுப. உதயகுமாரன். கே: அரசியலுக்குப் போவது சரியான முடிவா? ப: போராட்டம் என்பது வீதியில் நடத்தும் அரசியல். அரசியல் என்பது அரங்குகளில் நடத்தும் போராட்டம். மக்களுக்காகப் போராடத்தான் அரசியலுக்குப்… Continue reading தேர்தலில் நிற்பது கேவலமான செய்கையா? : சுப. உதயகுமாரன்

அரசியல், சினிமா

ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமை தாங்கும் நமீதா!?

நமீதா அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும்,  சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என நமீதா கேட்டதாகவும்  சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.. இது பற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது - "நான் திருச்சியில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பத்திரிகை  நண்பர்கள் நீங்கள் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வருகின்றனவே என்று கேட்டார்கள். ஆமாம் ஆர்வமுள்ளது என்று பதிலளித்தேன். எந்த கட்சியில் இணையப்போகிறீர்கள் என்று கேட்டார்கள்... இப்போதைக்கு சொல்லமுடியாது.… Continue reading ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமை தாங்கும் நமீதா!?