அரசியல், இலங்கை தமிழர், சினிமா

உலக அரங்கில் தமிழக மாணவர் போராட்டம்!

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் கெலம் மெக்ரே ‘பாதுகாப்பு வளையம்-இலங்கையின் கொலைக்களம்’ (killing field) என்ற ஆவணப்படத்தின் மூலம் அம்பலப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடக்க இருந்த ஐ.நா. மனித உரிமை அவையில், “இந்தியா என்ன செய்யப் போகிறது?” என்ற கேள்வியை கெலம் மெக்ரே எழுப்பினார். இந்தக் கேள்விக்கு விடை காண சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர் கடந்த ஆண்டு (2013)… Continue reading உலக அரங்கில் தமிழக மாணவர் போராட்டம்!

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, பௌத்தம், பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!, மயிலை சீனி. வெங்கடசாமி

பெளத்தம் தமிழுக்குத் தந்த பாளிமொழிச் சொற்கள்!

புத்தம் : ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி தமிழில் பாளிமொழிச் சொற்கள் வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு பாஷைச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர்.… Continue reading பெளத்தம் தமிழுக்குத் தந்த பாளிமொழிச் சொற்கள்!