இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று களவானிகளும், கூட்டம் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. ஹிட் ஹீரோவாக கோலிவுட்டில் வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரும் படம் மான் கராத்தே. அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்ட நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்தின் நாயகியாக ஹன்சிகா. படத்தை இயக்கியிருக்கிறார் கே. திருக்குமரன். சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவரும் ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் படத்தில் அருள்நிதி, பிந்துமாதவி, அர்ஷிதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காமெடிக்கு முக்கியத்துவம்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள் : டிரெய்லருடன் முன்னோட்டம்

http://youtu.be/0ac2TRhA8As இந்த வாரம் (6-12-2013) கல்யாண சமையல் சாதம், தகராறு இரண்டு படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. கல்யாண சமையல் சாதம் ஒரு திருமணம், சுற்றி நடக்கும் பல வேடிக்கையான சம்பவங்களை வைத்து தயாராகியிருக்கும் படம் ‘கல்யாண சமையல் சாதம்’. பிரசன்னா, லேகா வாஷிங்டன் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை, குறும்படங்களின் மூலம் பல விருதுகளை வென்ற ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியிருக்கிறார். ‘அச்சமுண்டு! அச்சமுண்டு!’ படத்தை தயாரித்த ஆனந்த் கோவிந்தனும் இயக்கிய அருண் வைத்யநாதனும் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள் : டிரெய்லருடன் முன்னோட்டம்

சினிமா, சினிமா இசை

தயாநிதி அழகிரி தயாரிப்பில் அருள்நிதி!

மெளனகுரு படத்திற்குப் பிறகு இடைவெளி எடுத்துக்கொண்ட அருள்நிதி அடுத்து நடிக்க ஒப்புக்கொண்ட படம் தகராறு. ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு சம்பவம் என்று பெயரிடப்பட்டிருந்தது. தற்போது தகராறு என்று மாற்றியிருக்கிறார்கள். பூர்ணா கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். படத்தை தம்பிக்காக தயாரித்திருக்கிறார் தயாநிதி அழகிரி. சிம்பு, தருண்கோபியிடம் பணியாற்றிய கணேஷ் வினாயக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள் இதோ...

சினிமா

இப்படியும் ஒரு படத்தின் தலைப்பு – ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்!

சிம்புதேவன் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் படத்திற்குத்தான் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் என பெயர் வைத்திருக்கிறார். இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். உதயம் என்எச்4 பட நாயகி ஹர்சிதா ஷெட்டி நாயகியாகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் பிந்து மாதவியும் நடிக்கிறார்கள். மூன்று களவாணிகளில் ஒருவராக நடுவில கொஞ்சம் பக்கத்தைக் கணோம் படத்தில் நடித்த பகவதி பெருமாள் நடிக்கிறார். பெயருக்கு ஏற்றமாதிரி படமும் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.