அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை

குடியரசு தினவிழா சர்ச்சைகள்!

தமிழக அரசு நேற்று கொண்டாடிய குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பறைசாற்றும்விதமாக வாகன அணிவகுப்பு நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, 'குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது அவமானகரமானது; இந்தியாவுக்கு இழுக்கு என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேபோல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் கிரண்பேடி,… Continue reading குடியரசு தினவிழா சர்ச்சைகள்!

அரசியல், இந்தியா

பின் வாசல் வழியாக டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் வெறும் 49 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சியை கலைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இதைதொடர்ந்து கடந்த பிப்ரவரி முதல் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில், தனிபெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில்… Continue reading பின் வாசல் வழியாக டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

அரசியல், பெண்ணியம்

வரதட்சணை சாவுகள் குஜராத்தில் அதிகமாக இருக்கிறதே ஏன் மிஸ்டர் மோடி?

அரசியல் பேசுவோம் குஜராத்தில்தான் பெண்கள் மிக பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.கவினரும் அவர்களுடைய ஆதரவாளர்களும் ஓங்கி ஒலித்தபடி இருக்கிறார்கள். நரேந்திர மோடி பிரதமராகிவிட்டால் நாட்டில் உள்ள பெண்களெல்லாம் மிக பாதுகாப்பாக இருக்கலாம் என்று பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். உண்மை நிலவரத்தை ஆதரத்துடன் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன்.  மோடிக்கு என்னுடைய 20 கேள்விகள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு கட்சி இருக்கிறது. அரசியல் பிரயாசைகள் இருக்கிறது. முன்னாள் முதல்வர். பாஜகவின் எதிரி. அதனால் அவர் கேள்வி கேட்டால்,… Continue reading வரதட்சணை சாவுகள் குஜராத்தில் அதிகமாக இருக்கிறதே ஏன் மிஸ்டர் மோடி?