சினிமா

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே: முதல் பார்வை

முதல் திரைப்படமான ஆரோகணம் மூலம் கவனத்தை ஈர்த்த, நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் இயக்கும் இரண்டாவது திரைப்படம் நெருங்கி வா முத்தமிடாதே. ஏ.வீ.ஏ நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை ஏ.வீ அனூப் தயாரிக்கிறார். ஷபீர் கலரக்கல் கதை நாயகனாகவும் பியா பாஜ்பாய் கதாநாயகியாகவும் நடிக்க லூசியா புகழ் சுருதி ஹரிஹரன், தம்பி ராமைய்யா, ஒய்.ஜி மகேந்திரன், அம்பிகா, ஏ.எல் அழகப்பன், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய பெட்ரோல் தட்டுப்பாடு என்பது மைய… Continue reading லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே: முதல் பார்வை

சினிமா

ரஜினி பிரசண்ட், கமல் ஆப்சண்ட் – 80களின் ஸ்டார் சந்திப்பு பிரத்யேக படங்கள்!

80களில் நட்சத்திரங்களாக அறிமுகமான தென்னிந்திய நடிகர்கள் வருடம் ஒருமுறை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். கடந்த நான்கு வருடங்களாக நடந்துவரும் இந்த சந்திப்பு, இந்த முறை சென்னையில் நடிகர் மோகன்லால் வீட்டில் நடந்தது. ரஜினிகாந்த், அம்ரிஷ், சிரஞ்சீவி, ராதா,ரேவதி, அம்பிகா, ராதிகா, மோகன்,நதியா, பிரபு, குஷ்பூ உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்ட இந்த விழாவினை சுஹாசினி ஏற்பாடு செய்திருந்தார். பீச் தீமில் கலந்து கொண்ட நடிகர் அனைவரும் உடையணிந்து இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.