குழந்தை வளர்ப்பு, பெண்

இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்

அமுதா சுரேஷ் ஒரு காளையை வளர்ப்பவன் ஜல்லிகட்டிற்காக அதைப் பயன்படுத்த அனுமதி கிடையாது, ஒரு நாயை வளர்ப்பவன், அதை துன்புறுத்துவதற்கு அனுமதி கிடையாது, அதெல்லாம் மிருக வதை, சட்டங்கள் பாயும்,வரவேற்கிறேன்! ஆனால், ஒரு பெண்ணை மணந்ததால் அவள் என் மனைவி என்று சாலையில், வீட்டில் துன்புறுத்துவதும், குழந்தையைப் பெற்று விட்டதால், அந்த உரிமையில் தன் கண்மூடித்தனமான அபிமானத்தையோ, சில ஆயிரம் பணத்துக்காகவும், அந்தக் குழந்தைகள் கதற கதற பச்சை குத்தவும், அலகு குத்தவும் செய்யும் போது, ஏன்… Continue reading இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்

Advertisements
அரசியல், சிறப்பு கட்டுரைகள்

இனத்துக்காக துடிக்கும் பாசம் இயற்கையை காப்பாற்றவும் துடிக்கட்டும்!

அமுதா சுரேஷ் சாதிவெறி, மதவெறியை அடுத்து இனவெறி, மொழி வெறித் தலைவிரித்தாடுகிறது! எதில் அரசியல் சேர்ந்தாலும் அதில் பாதிக்கப்படுவது அப்பாவிகளே, சில கன்னட வெறியர்கள் தமிழர்களைத் தாக்கினால், அதற்காக இங்கே இருக்கும் கன்னடர்களைத் தாக்குவதெல்லாம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போலத்தான்! காதல் என்றால், ஒருவன் உள்ளே நுழைகிறான், சாதிப்பெயரில் காதலர்களைச் கொலை செய்கிறான், அவனைத் தூக்கி வைத்து அந்தச் சமூகம் கொண்டாடுகிறது, அவன் கொலையாளியில் இருந்து சாதிக் சங்க தலைவன் ஆகிறான், அப்படியே அவன் அரசியலில்… Continue reading இனத்துக்காக துடிக்கும் பாசம் இயற்கையை காப்பாற்றவும் துடிக்கட்டும்!

பெண், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்

“அடிடா அவளை, வெட்றா அவளை”!

அமுதா சுரேஷ் ஒருதலையாகக் காதலித்து, பெண்ணின் மறுப்பைத் தாங்க முடியா "தி சோ கால்ட் ஆண்களின்" வன்முறைகளை யோசித்துப் பார்க்கும் போது, பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று, பஜ்ஜி சொஜ்ஜி சகிதம் பட்டாளத்துடன் போய், பெண் நெட்டை, குட்டை, மூக்கு சரியில்லை, முழி சரியில்லை என்று பெண்களை விமர்சித்து, அக்கா வேண்டாம் தங்கையைக் கொடுங்கள் என்று கூச்சமில்லாமல் பேசும் ஆண்களை எல்லாம் சம்பந்தப்பட்ட பெண்கள் இதுவரை ஏன் வெட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது பர்முடாஸ் என்ற பெயரில்… Continue reading “அடிடா அவளை, வெட்றா அவளை”!