அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

நீதிக்கு தலைவணங்க வேண்டும் அதிமுகவுக்கு ராமதாஸ் கண்டனம்

நீதிக்கு தலைவணங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவினரின் முறையற்ற போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்தியோ,  ஈழப்பிரச்னைக்காக போர்க்கொடி உயர்த்தியோ, மீனவர்கள் கைது மற்றும் மின்வெட்டு சிக்கலுக்காக குரல் கொடுத்தோ சிறைக்கு செல்லவில்லை. மாறாக, ஊழல்  செய்ததற்காகத் தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அதுவும் காலம் கடந்து தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி  தமிழகத்தைச் சேர்ந்தவர்… Continue reading நீதிக்கு தலைவணங்க வேண்டும் அதிமுகவுக்கு ராமதாஸ் கண்டனம்

அரசியல், தமிழ்நாடு

சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை: கண்டனக் கூட்டங்கள் நடத்த திமுக முடிவு

தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை என திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தொகுதி நலன் சார்ந்த பிரச்னைகளை பேச சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சியினர் விடுவதேயில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக ஆளுங்கட்சியினர் பேசுவதாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இந்த மாதம் 10ம் தேதி முதல் நடைபெற்ற நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் 9 நாட்களில் உறுப்பினர்கள் எட்டுமுறை வெளிநடப்பு செய்துள்ளனர் என்று கூறியுள்ள அவர், நான்கு முறை வெளியேற்றப்பட்ட… Continue reading சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை: கண்டனக் கூட்டங்கள் நடத்த திமுக முடிவு

அரசியல், அரசியல் பேசுவோம், சினிமா

அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா!

சங்கமம் படத்தில் அறிமுகமானவர் விந்தியா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்த இவர், திருமணமானவுடன் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார். தற்போது மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவின் சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் விந்தியா. அதிமுக சார்பாக நடிகர் ராமராஜன், செந்தில், வெண்ணிற ஆடை நிர்மலா, சிங்கமுத்து ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்துவருகின்றனர்.

அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014

இடதுசாரிகளின் முடிவு மக்கள் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது : ஜி. ராமகிருஷ்ணன்

அரசியல் பேசுவோம் அதிமுக அணியில் இருந்து இடதுசாரிகளின் விலகல் குறித்து பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  இந்த விலகலுக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் இடதுசாரிகள் தனித்து மக்களவை தேர்தலை சந்திப்பதை அரசியல் விமர்சகர் ஞாநி உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர். இடதுசாரிகளின் அடுத்தகட்ட நகர்வு குறித்து புரிதல் வர சிபிஐ(எம்)இன் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே தருகிறோம். “தமிழகத்தில் வரும் மக்களவைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இடதுசாரிகள் தங்களுக்கான பாதையில் மாற்றுக் கொள்கைகளை கம்பீரமாக முன்னெடுத்துச்… Continue reading இடதுசாரிகளின் முடிவு மக்கள் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது : ஜி. ராமகிருஷ்ணன்

அரசியல்

பிரதமர் பதவி நோக்கி ஜெயலலிதா : பிரச்சாரத்தில் சூசகம்!

அரசியல் பேசுவோம் மக்களவை தேர்தல் - 2014 தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக உடன் கூட்டணியில்லாமல் மக்களவைத் தேர்தலை சந்தித்திராத அதிமுக முதல்முறையாக இவர்களைத் தவிர்த்து தனித்து நிற்கிறது. காரணம் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவு இருந்தாலும் பாஜக கூட்டணியில் சேராமல் தவிர்த்துவிட்டது அதிமுக. காங்கிரஸ், திமுக உறவு முடிந்து காங்கிரஸ், அதிமுக கூட்டணி உருவாகலாம் என்கிற நிலைமை வந்தபோதும் அதை தவிர்த்தார் ஜெயலலிதா. தமிழக மக்களிடையே காங்கிரஸுக்கு… Continue reading பிரதமர் பதவி நோக்கி ஜெயலலிதா : பிரச்சாரத்தில் சூசகம்!