அரசியல், தமிழ்நாடு

சுப. உதயகுமாரன் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற குற்றச்சாட்டு: அரசிடம் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்கிறது

அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்தி இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதாக மத்திய உளவு நிறுவனமான இன்டெலிஜென்ஸ் பீரோவின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானது. உதயகுமார் குற்றம் செய்ததற்கு ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்க வேண்டும். இதற்கு பதிலாக ரகசிய அறிக்கை என்ற பெயரில் ஒரு அவதூறுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது என்றும் மத்திய உளவுத்துறை சேகரிக்கும் தகவல்களை உரிய அனுமதியின்றி வெளியிடுவது… Continue reading சுப. உதயகுமாரன் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற குற்றச்சாட்டு: அரசிடம் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்கிறது

அரசியல், அரசியல் பேசுவோம்

புதிய தலைமுறை கவர் ஸ்டோரி : மாலனுக்கு சுப. உதயகுமாரன் கேள்வி

அண்மையில் புதிய தலைமுறை வார இதழில் பணத்திற்காகப் போராடுகிறார்களா? என்னும் தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. அது குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் "புதிய தலைமுறை" வார இதழில் ஆசிரியர் திரு. மாலன் "பணத்திற்காகப் போராடுகிறார்களா?" எனும் ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறார். அவர் அணுசக்தி ஆதரவாளர் என்றாலும், என்னைப் பெரிதாக விரும்பாதவர் என்றாலும், கட்டுரையைத் தெளிவாக, நேர்மையாகவே எழுதியிருக்கிறார். அரசின்… Continue reading புதிய தலைமுறை கவர் ஸ்டோரி : மாலனுக்கு சுப. உதயகுமாரன் கேள்வி

அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014

தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது?

அரசியல் பேசுவோம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டே பல்வேறு திட்டங்களுக்கு ஆதராக வாக்களித்துவிட்டு இப்போது அவற்றை எதிர்த்து தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கும் திமுகவை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. “தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் அப்படி மவுனம் சாதிக்கிறது? கனிமொழியின் கனவுத்திட்டம் என்பதாலா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழ. இன்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை, “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்”… Continue reading தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது?