பெண்

”என்னால் முடியும்”: ஃபேஸ்புக்கில் வைரலான பணிபுரியும் ஒரு அம்மாவின் பதிவு!

“இங்கே தரையில் படுத்திருப்பது குழந்தையல்ல. எனது இதயம்தான், தரையில் கிடக்கிறது. அவனுக்கு காய்ச்சல் இருக்கிறது. எனவே, வேறு யாரிடமும் சேர்ந்து இருக்க மறுக்கிறான். எனது பணியில் பாதி நாள் முடிந்துவிட்டது. ஒரு லோன் விடுவிக்கும் பணியில் நான் இருப்பதால் என்னால் லீவும் போட முடியவில்லை. காய்ச்சலில் அவதிப்படும் குழந்தையையும் பார்த்துக் கொண்டு அலுவலகத்திலும் என்னால் பணிபுரிய முடிகிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதை சட்டசபையில் தூங்கும் தூங்கும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தவே” என்று புனேயைச் சேர்ந்த வங்கி ஊழியர் சுவாதி சிதால்கர்… Continue reading ”என்னால் முடியும்”: ஃபேஸ்புக்கில் வைரலான பணிபுரியும் ஒரு அம்மாவின் பதிவு!

Advertisements
இசை கலைஞர்கள், உலகம், சினிமா

100 மில்லியன் ஃபேஸ்புக் லைக் பெற்று ஷகிரா சாதனை!

சர்வதேச அளவில் எந்த பிரபலமும் பெறாத சாதனையை பெற்றிருக்கிறார் பாப் பாடகர் ஷகிரா. ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் ஷகிராவின் பக்கத்துக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் 57 % பேர் பெண்கள். சமீபத்தில் நடைபெற்ற உலக கால்பந்து போட்டிகளில் நல்லெண்ண தூதராக ஷகிரா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், அரசியல் பேசுவோம், இன்றைய முதன்மை செய்திகள்

இராக்கிலிருந்து நர்ஸுகள் விடுவிக்கப்பட்ட பின்னணி…

இராக்கிலிருந்து  ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேர், இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் கொச்சி வந்தனர். அவர்களை வரவேற்க கேரள முதல்வர் உம்மன்சாண்டி உள்பட காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் பலர் கொச்சின் விமான நிலையத்தில் காத்திருந்தனர். விமான நிலையம் வந்தடைந்த செவிலியர்கள் கேரள முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். சில செவிலியர்கள் நெகிழ்ச்சியில் கேரள முதல்வரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர். நேற்று முந்தினம் வரை… Continue reading இராக்கிலிருந்து நர்ஸுகள் விடுவிக்கப்பட்ட பின்னணி…

அறிவியல்/தொழிற்நுட்பம், இணைய பயன்பாடு, இணையம்

முன்னோடி சமூக வலைதளமான ஆர்குட் சேவை நிறுத்தம்

சமூக வலைதளங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய ஆர்குட் தன் சேவையை வரும் செப்டம்பர் 30ந்தேதி தன்னுடைய பயணத்தை நிறுத்த இருக்கிறது. இணைய நிறுவனமான கூகுளுக்குச் சொந்தமான ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வருகையால் சுணக்கம் கண்டது. இதையடுத்து கூகுள் பிளஸ் சேவையை அறிமுகப்படுத்திய கூகுள். ஆர்குட் தளத்துக்கு வரவேற்பு இல்லாத சூழலில் அதை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது கூகுள் நிறுவனம். ஆர்குட் என்ற பெயர் இந்த தளத்தை வடிவமைத்தவரின் பெயரான Orkut Buyukkokten என்பதிலிருந்து பெறப்பட்டது.