இயற்பியலுக்கான நோபல் அறிவிப்பு: மூன்று ஜப்பானியர் பகிர்கின்றனர்
நோபல் விருது 2014 உலக வெப்பமயமாதலைத் தூண்டாத அளவுக்குக் குறைந்த அளவில் கரியமில வாயுவை வெளியிடும் எல்.ஈ.டி. விளக்குகளை உருவாக்கிய சாதனைக்காக, ஜப்பானைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இசாமு அகசாகி, ஹிரோஷி அமனோ, சுஜி நகமுரா ஆகிய ஆய்வாளர்கள் இந்தப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்தது. பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்கள் அவர்கள் மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது…. Read More ›
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: மூவர் பகிர்ந்துகொள்கின்றனர்!
நோபல் பரிசு 2014 இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு, பிரிட்டிஷ் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீஃப், நார்வேயைச் சேர்ந்த தம்பதி எட்வர்ட் மோஸர், மே-பிரிட் மோஸர் ஆகிய மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நோபல் பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்களில் (சுமார் ரூ.6.7 கோடி) ஒரு பாதி ஜான் ஓ கீஃபுக்கும், மற்றொரு பாதி மோஸர் தம்பதிக்கும் பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பிடத்தை அறிந்துகொண்டு, செல்ல வேண்டிய இடத்துக்கு வழிகாட்டும் குளோபல் பொஸிஷனிங்… Read More ›
இயற்பியல் துறை நோபல் பரிசு: சென்னையைச் சேர்ந்தவ ஆய்வாளரின் பெயர் பரிந்துரை
நடப்பாண்டு இயற்பியல் துறை நோபல் பரிசுக்கான பட்டியலில், அமெரிக்காவில் வசிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளரான ராமமூர்த்தி ரமேஷின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இயற்பியல் துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கான, நோபல் பரிசு வரும் செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இந்த பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா, மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ராமமூர்த்தி ரமேஷ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் யொஷினோரி டோகுரா உள்ளிட்டோரின்… Read More ›
மங்கள்யான் எடுத்த முதல் புகைப்படம் வெளியீடு
செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதல்நாளிலேயே வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தைப் வண்ணப் புகைப்படம் பிடித்து அனுப்பியுள்ளது.இந்தப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை பல கோணங்களில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்களை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனும், இஸ்ரோ நிறுவனத்தின் அறிவியல் ஆலோசகர் வி.கோடீஸ்வர ராவும் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து சமர்ப்பித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்… Read More ›
சீன கிளையை மூடுகிறது அடோப் நிறுவனம்
அமெரிக்க மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான அடோப் சீனாவில் உள்ள தன்னுடைய கிளையை மூடுவதாக அறிவித்துள்ளது. வருமானம் ஈட்டுவதில் ஏற்பட்ட தொடர் சரிவே இந்த முடிவை எட்டக்காரணம் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதனால் 400 ஊழியர்கள் வேலையை இழக்கிறார்கள். சீன கிளையில் பணியாற்றிய 30 பேர் மட்டும் அமெரிக்க, இந்திய கிளைகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாந்தனு நாராயண், அடோப் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
முயல் வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பல்வேறு சிறுதொழில் கண்காட்சி!
மதுரையில் கால்நடை,கோழிவளர்ப்பு தொடர்பான பணியரங்கு மற்றும் கண்காட்சி 2 நாள்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு மற்றும் சர்வதேச பண்ணைய ஆண்டு ஆகியவற்றை முன்னிட்டு இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. மடீட்சியாக அரங்கில் இன்று (ஆக.1) மற்றும் நாளை (ஆக.2) இந்நிகழ்வு நடைபெறும். பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்கம் இதற்கான ஏற்பாடு செய்துள்ளது. குடும்ப பண்ணையம் மூலம் லாபகரமான கால்நடை மற்றும் கோழிவளர்ப்பு என்ற தலைப்பில் நடைபறும் இந்நிகழ்வில், கண்காட்சி, தொழில்நுட்ப விரிவுரைகள், தொழில்நுட்ப செயல்… Read More ›
ராமானுஜன் நல்ல முயற்சி : விமர்சகர் ஞாநி பாராட்டு
கணிதமேதை ராமானுஜன் வாழ்க்கையை சொல்லும் ராமானுஜன் திரைப்படம் நல்ல முயற்சி என்று பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள குறிப்பில், ‘இரவுக் காட்சிகள் பார்ப்பதில்லை என்ற பத்தாண்டு விரதத்தை முறித்து, நேற்று இரவு ஞான ராஜசேகரனின் ‘ராமானுஜன்’ படச் சிறப்புக் காட்சிக்குச் சென்றேன். சில குறைகள் இருந்தபோதும் நல்ல முயற்சி. படத்தின் சிறப்பு அம்சம் ரமேஷ் விநாயகத்தின் இசை. படம் பார்த்து முடிந்து வந்தபின் நள்ளிரவுக்கு மேல் கணித மேதை ராமானுஜனின் மனைவி ஜானகி அம்மாளைப் பற்றிய குறிப்புகளை… Read More ›
முன்னோடி சமூக வலைதளமான ஆர்குட் சேவை நிறுத்தம்
சமூக வலைதளங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய ஆர்குட் தன் சேவையை வரும் செப்டம்பர் 30ந்தேதி தன்னுடைய பயணத்தை நிறுத்த இருக்கிறது…
மனித ரோபோக்களை விற்க கூகுள் திட்டம்!