கல்வி – வேலைவாய்ப்பு


இயல்-இசை-நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்கிறது அரசு: ஆர்வமுள்ளவர்கள் பதியலாம்!

தமிழகத்தில் இயல், இசை, நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஆர்வமுள்ள கலைஞர்களும் கலை நிறுவனங்களும் தங்களது விவரங்களை அனுப்பலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொன்மைச் சிறப்புமிக்க தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக் குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர்களுக்கும், கலைக் குழுக்களுக்கும் இசைக் கருவிகள் உள்ளிட்டவை வழங்க தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், பதிவு செய்யப்பட்ட கலைக் குழுவுக்கு… Read More ›

அடுத்த 3 ஆண்டுகளில் இணைய வணிகத்தில் ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்பு!

அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இணைய வணிகத்தில் குறைந்தது 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என அன்டல் இன்டர்நேஷனல் நெட்வொர்க் நிறுவனத்தின் இந்தியக் கிளை மேலாண் இயக்குனர் ஜோசப் தேவேஷியா தெரிவித்துள்ளார்.  அடுத்த 3 ஆண்டுகளில் 25 சதவிகித வளர்ச்சி ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இத்துறை கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக உள்ளது எனவும், 2016ம் ஆண்டு வாக்கில், இது… Read More ›

ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை மதிப்பெண் அளிக்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.கே.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர் பணியில் நியமனம் செய்ய முடியும் என மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. தேர்வுக்கான தகுதிகளையும் வரையறை செய்துள்ளது…. Read More ›

சிறுதொழில் வாய்ப்பு உள்ள மலர் அலங்காரம் மற்றும் பூச்சண்டு தயாரிக்க ஒரு நாள் பயிற்சி!

மனித வாழ்வில் மலர்களின் பங்கு அதிகமானது. மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காரணியாக மலர்களை பயன்படுத்தும் வழக்கம் ஆதிகாலம் முதல் உள்ளது. வளர்ந்து வரும் தற்போதிய நாகரிக வாழ்வில் மலர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே மலர்களை ஒட்டிய சிறுதொழில்களும் தோன்றியுள்ளன. கொய் மலர்களை பயன்படுத்தி பூச்சண்டு தயாரித்தல், மேசை அலங்காரம் மற்றும் அரங்குகளின் அலங்காரம் செய்தல், உதிரி பூக்களை பயன்படுத்தி பூச்சரம் கட்டுதல், மாலை கட்டுதல், கொண்டை சரம் கட்டுதல் போன்றவை அவற்றில் சில… இவற்றை தொழில் ரீதியாக… Read More ›

ஐ.டி. துறை ஆள்குறைப்பு: 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது சிஸ்கோ

மைக்ரோசாஃப்டில் பணியாற்றும் 18,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ஐ.டி. துறை ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நெட்வொர்க் சாதனங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமான சிஸ்கோ, தற்போது தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ரவுட்டர்கள், அதி நவீன ஸ்விட்சுகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள சிஸ்கோவின்… Read More ›

25 சதவீத இடஒதுக்கீட்டை மறுத்த தனியார் பள்ளிகள்: பட்டியலை தயாரிக்கிறது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, நுழைவு வகுப்புகளில் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்த பள்ளிகளின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இலவச மற்றும் கட்டாயக்… Read More ›

ஆல் இந்தியா ரேடியோவில் தமிழில் செய்தி வாசிப்பு பணி!

புதுடெல்லியில் செயல்பட்டும் வரும் ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: செய்தி வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு காலியிடங்கள்: 6 வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 – 45க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும்… Read More ›

பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மேல்படிப்புக்கு அரசு உதவித்தொகை!

தமிழக அளவில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ/மாணவியர்களில் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவியர் மற்றும் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் பட்டய / பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ரூ.3000/-வீதம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மார்ச் 2014-இல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று தேர்வு எழுதி 1173… Read More ›

சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணி!

சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி:  இலக்கியத்தில் பட்டமேற்படிப்புடன் ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை. பணித் தகுதி: குறைந்தது 5 ஆண்டுகள் இலக்கியத்தில் செம்மைபடுத்தும் அனுபவம்(எடிட்டிங்) இருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவும் அவசியம். கூடுதல் தகுதி: இலக்கிய ஆய்வு பட்டம் பெற்றவர்கள், இலக்கிய பரிட்சையம் உள்ளவர்கள்,… Read More ›

சாக்லேட், ஐஸ்க்ரீம் தயாரிக்க பயிற்சி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரீம் தயாரிப்பு பற்றி ஒரு நாள் பயிற்சி … Read More ›

வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமா? இதோ ஒரு வாய்ப்பு!

வீட்டின் பின் பகுதியில் உள்ள காலி இடங்களில் பழங்கள், காய்கறி மற்றும் மூலிகைப் பயிர்களை வளர்ப்பதனால் வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருட முழுவதும் … Read More ›

மத்திய அமைச்சகம் ஆரம்பித்திருக்கும் புதிய வேலை தேடு தளம்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, புதிய வேலை தேடு தளத்தை ஆரம்பித்திருக்கிறது. இணைய முகவரி: http://www.niesbudnaukri.com

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறால் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி ஜூலை 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இறால்… Read More ›

பார்வையற்றவர்களுக்கு மீடியாவில் பணி வாய்ப்பு குறித்து பயிலரங்கு!

பார்வையற்றவர்களுக்கு மீடியாவில் உள்ள குரல் சார்ந்த மற்றும் குரல் சாராத புதிய பணி வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது.  மேலும்… Read More ›

பாலிடெக்னிக் மற்றும் அறிவுத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு நிதி உதவி!

சுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி!

பெண்களுக்கு வேலைவாய்ப்பு தரும் மழலையர் பராமரிப்புச் சான்றிதழ் படிப்பு!

இந்திய வனத்துறையில் பணியாற்ற விருப்பமா?

கல்விக் கடன் பெறுவதில் பிரச்னையா? இவர்கள் உதவுவார்கள்!

புதுச்சேரி அரசு கல்வி நிறுவனத்தில் மருந்தியல் படிப்புகள்!

சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி!

சுயதொழில் செய்ய வழிகாட்டி!

சுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி!

சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி!

பிரபல மியூசியங்களில் வேலை பார்க்க விருப்பமா? இதோ உங்களுக்கான படிப்பு!

புதுச்சேரி அரசு கல்வி நிறுவனத்தில் மருந்தியல் படிப்புகள்!

இசைப் பள்ளி நடத்துகிறார் சோனியா அகர்வால்!

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s