சிறு தொழில், சுயதொழில், செய்முறை பயிற்சி, தொட்டிச் செடி வளர்ப்பு, தொழில் தொடங்க ஆலோசனை, நகர்புற தோட்ட வளர்ப்பு துறை, நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், புத்தக அறிமுகம், புத்தகம், பெண் தொழில் முனைவு, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம், வெற்றிக்கதை, வேலைவாய்ப்பு

நகரங்களிலும் மண்புழு உரம் தயாரிக்கலாம்!

புத்தக அறிமுகம் மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழிற்நுட்பமும் பயன்களும் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002 தொலைபேசி: 04259 226012 கைபேசி: 98650 05084 மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com அதிகரித்து வரும் பொருளாதார சுமைகளை குறைக்கும் ஒரு தீர்வாக தற்சார்பு பொருளாதாரம் குறித்து தற்சமயம் அறிஞர்களின் பார்வை திரும்பியிருக்கிறது. தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் பண்டைய கோட்பாடு புத்துயிர் பெற்றிருக்கிறது.… Continue reading நகரங்களிலும் மண்புழு உரம் தயாரிக்கலாம்!

சுயதொழில், பெண் தொழில் முனைவு, வேலைவாய்ப்பு

சுயதொழில் செய்ய வழிகாட்டி!

வேலைவாய்ப்பு இன்றைய நவீன வாழ்க்கை சூழல் பல்வேறு புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிவருகிறது. குறிப்பாக சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தற்சமயம் அதிகமாக உள்ளன. அந்த வகையில்  பிட்டர், வெல்டிங், குளிர்சாதனப் பெட்டி பழுது பார்த்தல், உணவு தயாரித்தல் உள்ளிட்ட துறைகள் உள்ள சுயதொழில் வாய்ப்புகள் குறித்த கண்காட்சி சென்னையில் நடைபெற உள்ளது. புதிய தலைமுறை அறக்கட்டளை நடத்தும் சுயதொழில்-2014 கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஜூன் 27 மற்றும் 28-ம் தேதி, சென்னை கிண்டி ஐடிஐ வளாகத்தில் நடைபெற… Continue reading சுயதொழில் செய்ய வழிகாட்டி!

பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம், வேலைவாய்ப்பு

கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமா?

பெண்களும் தொழில்முனைவும் நிறைய பெண்கள் கைவினைப் பொருட்கள் செய்வதில் திறமைமிக்கவர்களாக இருந்தும் அந்தப் பொருட்களை விற்பதில் உள்ள சங்கடங்களை நினைத்து அந்தத் திறமைகளை வளர்த்தெடுக்கவே மாட்டார்கள். இன்றைய காலகட்டம் அதற்கு பல்வேறு வழிகளை வழங்கிவருகிறது. சென்னை போன்ற நகரங்களில் கைவினைப்பொருட்கள் விற்பனை செய்வதற்கு பல்வேறு அமைப்புகள் உதவிக்கொண்டிருக்கின்றன. தென்னிந்திய மகளிர் தொழில் முனைவோர் சங்கம், சுயதொழில் செய்யும் பெண்களை ஊக்கும்விக்கும் வகையில் மாதந்தோறும் சென்னையில் விற்பனை கண்காட்சியை நடத்துகிறது. சுயதொழில் செய்யும் பெண்கள், தாங்கள் தயாரித்த பொருட்களை இந்த… Continue reading கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமா?

சினிமா, தமிழ்ப்பெண், வேலைவாய்ப்பு

கோ-ஆப்டெக்ஸ் விளம்பரத்தில் நடிக்க தமிழ்ப் பெண்கள் தேவை!

வேலைவாய்ப்பு தமிழக அரசின் கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், தமிழ் மண்ணின் முகக்கூறுகள், நிறம் கொண்ட மாடலிங்கில் ஆர்வமுள்ள பெண்களை விளம்பரத்திற்காகத் தேடிக்கொண்டிருக்கிறது. ஆர்வமுள்ள 20 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்கள் பாஸ்போர்ட் சைஸ் மற்றும் முழு அளவு புகைப்படத்துடன் கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். விளம்பரப் பிரிவு, கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை- 8

குழந்தைகளுக்கான புத்தகங்கள், நேஷனல் புக் டிரெஸ்ட், வேலைவாய்ப்பு

நேஷனல் புக் டிரெஸ்டில் ஓவியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு!

வேலைவாய்ப்பு தகவல் மத்திய அரசின் புத்தக வெளியீட்டு நிறுவனமான நேஷனல் புக் டிரெஸ்ட், பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. நேருவின் பெயரில் குழந்தைகளுக்கான புத்தகங்களையும் வெளியிடுகிறது. குழந்தைகளுக்கான புத்தகங்களுக்காக ஓவியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது நேஷனல் புக் டிரெஸ்ட். திறமையுள்ளவர்கள் தங்கள் படைப்புகளுடன் office.nbt@nic.in என்ற இமெயில் முகவரியில் தங்களுடைய விவரங்களுடன் தொடர்பு கொள்ளலாம். http://nbtindia.gov.in/ என்ற இந்த இணையதளத்தில் மேல் தகவல்களைப் பெறலாம்.