கான்கிரீட் கலைப்பொருட்கள், செய்து பாருங்கள், வீட்டுத் தோட்டம், வீட்டை அலங்கரித்தல்

செய்து பாருங்கள்: கான்கிரீட் இலைகள்

கான்கிரீட் கலைப்பொருட்கள் செய்முறை குறித்து பார்த்து வருகிறோம். இதில் அனைவராலும் செய்ய முடிந்த ஒன்று இலைகள் போன்ற கான்கிரீட் கலைப் பொருட்களை உருவாக்குவது. இதற்குத் தேவை உங்களுக்குப் பிடித்த ஒரு இலை, மணல், சிமெண்ட் கலந்த கலைவை மட்டும்தான். சிறிய இலைகள், அகலமான இலைகள், ஐந்து விரல்களைப் போன்ற இலைகள் , வட்டம், நீள் சதுரம் என பல வடிவ இலைகளை நீங்கள் பயன்படுத்தலாம். மணல், சிமெண்டை நீர் சேர்த்து கலக்கவும். ஒரு சமதளமான மரப்பலகை அல்லது… Continue reading செய்து பாருங்கள்: கான்கிரீட் இலைகள்

செய்து பாருங்கள், வீட்டை அலங்கரித்தல்

வீட்டு அலங்காரம்: விளக்கில் பூ…

கண்காட்சி, செய்து பாருங்கள், வீட்டை அலங்கரித்தல்

வீட்டை அலங்கரித்தல் – குத்து விளக்குடன் செராமிக் கலைப்பொருட்கள்

சமீபத்தில் சென்னை லலித்கலா அகாடமியில் இந்தோ கொரியன் கலைஞர்களின் செராமிக் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு கலைஞர் குத்துவிளக்கின் அடிப்பாகத்தைப் பயன்படுத்தி மேலே செராமிக்கால் ஆன தட்டுகளால் அலங்கரித்திருந்தார். தட்டின் மேல் கோலங்கள் வரையப்பட்டிருந்தன. பார்க்க மிக அருமையாக இருந்தது.

கான்க்ரீட் கலைப் பொருட்கள், செய்து பாருங்கள், வீட்டை அலங்கரித்தல்

DIY: டைனிங் டேபிளில் வைக்க கான்க்ரீட் கலைப் பொருள்!

கான்கிரீட்டில் தொட்டிகள் உருவாக்குவது குறித்து நாம் பார்த்தோம். கான்கிரீட்டில் அழகான கலைப் பொருட்களையும் உருவாக்க முடியும். அதற்கொரு உதாரணம்தான் டைனிங் டேபிளை அழகூட்டும் இந்த கலைப்பொருள்! பயன்படுத்திய இனிப்பு பெட்டிகளை வைத்து, அதை கான்கிரீட்டால் நிரப்பி, தொட்டிகள் செய்யலாம். வழிமுறை இங்கே... இவற்றை அழகூட்ட கடற்கரைகளில் சேகரித்த சங்குகளை வைத்து அலங்கரிக்கலாம். தயாரான கான்கிரீட் தொட்டியை டைனிங் டேபிளில் வைப்பதற்கு ஏற்ற வகையில் மாற்ற வண்ணம் பூசப் போகிறோம். அதற்கு மெட்டாலில் அக்ரலிக் நிறங்கள் பொருத்தமாக இருக்கும். வண்ணம் பூச தட்டையான… Continue reading DIY: டைனிங் டேபிளில் வைக்க கான்க்ரீட் கலைப் பொருள்!

இன்றைய முதன்மை செய்திகள், செய்து பாருங்கள், வீடு பராமரிப்பு, வீட்டை அலங்கரித்தல்

சங்கு, சிப்பிகளை சேகரித்ததுண்டா?

ஒவ்வொரு அலைக்கும் ஒரு சங்கதி சொல்லும் கடலை ரசிக்காமல் இருக்க முடியாது. கடலை மட்டுமா, கரையெங்கும் பரந்து கிடக்கும் மணலை, மணலில் புதைந்திருக்கும் விதம்விதமான சங்கு, சிப்பிகளை ரசித்திருப்போம். ரசித்ததை சிலர் வீடு வரை எடுத்து வருவதுண்டு. சில நாட்களில் அவை குப்பைக்குப் போய்விடும் என்பதுதான் இறுதியாக வரும் பரிதாபம். சங்கு, சிப்பிகளை இனம் வாரியாக பிரித்து பராமரிக்கும் வழக்கம் மேலை நாடுகளில் உண்டு. சங்கு, சிப்பி சேகரிப்பதற்கென்றே அவர்கள் கடற்கரைகளைத் தேடி பயணப்படுவதுண்டு. இது பணக்காரர்களுக்கான… Continue reading சங்கு, சிப்பிகளை சேகரித்ததுண்டா?