இன்றைய முதன்மை செய்திகள், செய்து பாருங்கள், வீடு பராமரிப்பு, வீட்டை அலங்கரித்தல்

சங்கு, சிப்பிகளை சேகரித்ததுண்டா?

ஒவ்வொரு அலைக்கும் ஒரு சங்கதி சொல்லும் கடலை ரசிக்காமல் இருக்க முடியாது. கடலை மட்டுமா, கரையெங்கும் பரந்து கிடக்கும் மணலை, மணலில் புதைந்திருக்கும் விதம்விதமான சங்கு, சிப்பிகளை ரசித்திருப்போம். ரசித்ததை சிலர் வீடு வரை எடுத்து வருவதுண்டு. சில நாட்களில் அவை குப்பைக்குப் போய்விடும் என்பதுதான் இறுதியாக வரும் பரிதாபம். சங்கு, சிப்பிகளை இனம் வாரியாக பிரித்து பராமரிக்கும் வழக்கம் மேலை நாடுகளில் உண்டு. சங்கு, சிப்பி சேகரிப்பதற்கென்றே அவர்கள் கடற்கரைகளைத் தேடி பயணப்படுவதுண்டு. இது பணக்காரர்களுக்கான… Continue reading சங்கு, சிப்பிகளை சேகரித்ததுண்டா?

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், வீடு பராமரிப்பு

வீட்டை அலங்கரிக்க சீன விசிறி: step by step படங்களுடன் செய்முறை

  வீட்டின் வாசலில் அல்லது வரவேற்பறையில் வைக்க இந்த சீன விசிறி மிக அழகாக இருக்கும். குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களின் போது அல்லது பள்ளி விடுமுறை நாட்களில் இது போல செய்யச் சொல்லி அவர்களின் கற்பனைத் திறனை தூண்டலாம். செலவு அதிகம் பிடிக்காது. வீடும் அழகாகும்! செய்து பாருங்கள்...சீன விசிறி செய்முறையை விடியோவில் காண.. http://www.youtube.com/watch?v=_QWo3YAk05Y    

பராமரிப்பு குறிப்புகள், வீடு பராமரிப்பு

வெள்ளாவி போடுவது எப்படி?

பராமரிப்பு குறிப்புகள் முன்பெல்லாம் துணிகளை வெளுக்க வெள்ளாவி போட்டு துவைப்பார்கள். இப்போது டிரை க்ளீன் செய்து தருகிறார்கள். ஒவ்வொரு முறையும் கடையில் கொடுத்து டிரை க்ளீன் செய்ய நேரம் இல்லாமல் போகலாம். அதேபோல் விலை மலிவான காட்டன் துணிகளை கடையில் கொடுத்து டிரை க்ளீன் செய்வது கட்டுப்படி ஆகாது. கவலையை விடுங்கள் இதை வீட்டிலேளே குறைந்த செலவில் செய்யலாம். கொதிக்கும் வெந்நீரில் இரண்டு ஸ்பூன் வாஷிங் சோடா, இரண்டு ஸ்பூன் சோப் பவுடர் போட்டு ஒரு நிமிடம்… Continue reading வெள்ளாவி போடுவது எப்படி?

கோலம், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், பாரம்பரியம், புள்ளிக் கோலம், மார்கழி கோலம், வீடு பராமரிப்பு

புள்ளிக் கோலம் எப்படி உருவானது?

புள்ளி கோலம் கற்கலாம்! கோலங்களில் புள்ளிகளை அடிப்படையாக வைத்து போடப்படும் புள்ளி கோலம் ரொம்பவே சிக்கலான ஒன்று. இதைப் போடுவதற்கு நுட்பமான அறிவு தேவை. கணக்கும் நுண்ணிய கவனிப்பும் இதற்கு உள்ளே பொதிந்திருக்கும் அறிவியல் விஷயங்கள். இன்னோரு பயன், மனதை ஒருமைப்படுத்துவது. கல்விக்கூடங்கள் இல்லாத அந்தக் காலத்தில் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்களுக்கு கணக்கு கற்றுக் கொடுத்தவை இந்தக் கோலங்கள்தான். இன்று மனதை ஒருநிலைப்படுத்தவும் கணிதம் பயிலவும் ஏராளமான வழிகள் உண்டு! ஆனால் அந்தக் கால பெண்கள் உருவாக்கிய கணக்கை அடிப்படையாகக்… Continue reading புள்ளிக் கோலம் எப்படி உருவானது?

மலர் அலங்காரம், வீடு பராமரிப்பு, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டிலேயும் செய்யலாம் மலர் அலங்காரம்!

மலர் அலங்காரம் செய்வதென்றால் விலைமிக்க பூக்களை வாங்கி, விலையுயர்ந்த அலங்கார பூ ஜாடிகளில் வைக்கவேண்டும் என்பதில்லை. வீட்டில் பயன்படாமல் இருக்கும் வெண்கல பூஜையறை பொருட்களை வைத்தே அலங்காரம் செய்ய முடியும். பூக்களுக்கும் அதிகம் செலவிட வேண்டியதில்லை. மார்க்கெட்டில் உதிரியாகக் கிடைக்கும் ரோஜா, சாமந்தி, தோட்டத்தில் பூக்கும் ஒன்றிரண்டு பூக்களையும் வைத்து அழகு செய்யலாம்.