செய்து பாருங்கள், மார்கழி கோலம்

மார்கழி கோலம்: இதோ மீண்டும் ரங்கோலி!

கோலமிட்டவர் அகநாழிகை பொன் வாசுதேவன் மகள் காய்த்ரி

கோலம், மார்கழி கோலம்

மார்கழி கோலங்கள் – கலியாண மேடை கோலம்

மார்கழி கோலங்கள் வரிசை கலியாண மேடை கோலம் மிகவும் புகழ்பெற்றது. அந்த கால திருமணங்களின்போது படிப்படியாக உள்ள திருமண வீடுகளில் இந்தக் கோலம் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். பார்ப்பதற்கு சிக்கலான புள்ளிக்கோலமாக இது தெரிந்தாலும் போடுவது மிகவும் சுலபம். பெட்டிப்பெட்டியாகப் போட்டு அவற்றை இணைக்க வேண்டும், அவ்வளவுதான். கோலத்தைப் பார்த்து புள்ளிகளை வைக்க வேண்டும். 21 புள்ளி நேர்புள்ளி 5வரிசை அதற்கடுத்து அந்தப் பக்கம் இந்தப்பக்கம் 3 புள்ளிகளை விட்டுவிட்டு 13 புள்ளி வைத்து 4 வரிசை வையுங்கள்.… Continue reading மார்கழி கோலங்கள் – கலியாண மேடை கோலம்

கோலம், கோலம் போடுவது எப்படி, மார்கழி கோலம்

மார்கழி கோலங்கள் – பூந்தொட்டி கோலம்!

மார்கழி சிறப்பு கோலங்கள் பூந்தொட்டி கோலம் 17 புள்ளி 9 முடிய இடைப்புள்ளி புள்ளி இடும்போது கிடைமட்டமாக 17 புள்ளிகளை வைத்து மேல், கீழ் பகுதிகளில் சந்து புள்ளிகளை இட்டு 9 புள்ளியில் நிறுத்துங்கள்.

கோலம், கோலம் போடுவது எப்படி, மார்கழி கோலம்

மார்கழி ஸ்பெஷல் – நீர் கோலம்!

மார்கழி ஸ்பெஷல் கோலங்கள் வரிசையில் இன்றைய பதிவில் நீர் கோலம் பற்றி பார்க்க இருக்கிறோம். 15 புள்ளி நேர்ப்புள்ளி 3 வரிசை 1 முடிய புள்ளி இட்டு படத்தில் காட்டியுள்ள படி நீர்போகும் திசையில் கோடுகள் இழுத்து புள்ளிகளை இணைப்பதே நீர் கோலம்.

கோலம், கோலம் போடுவது எப்படி, செய்து பாருங்கள், மார்கழி கோலம்

மார்கழி ஸ்பெஷல் – பவுத்திர கோலம்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட கோலப் புத்தகம் ஒன்றில் பார்த்த கோலம் இது. பவுத்திரம் என்பதற்கு அடுத்தடுத்து வரும் வட்ட வடிவ வடிவிலான கட்டிகள் என்று பொருள். இந்தக் கோலத்தில் அடுத்தடுத்து, ஒன்றையொன்றை ஒட்டியபடி வட்ட வடிவங்கள் வருவதால் பவுத்திர கோலம் என்று பெயர் வைத்திருக்கலாம். மிகவும் அழகான கோலம் இது. நேர்புள்ளி, இடைப்புள்ளி என மாறிமாறி புள்ளிகள் இட்டு, நேர்த்தியாக அவற்றை இணைத்து உருவாக்கும் கோலம். படத்தைப் பார்த்துதான் புள்ளி வைக்க முடியும். எல்லாமே மனக்கணக்குதான்.… Continue reading மார்கழி ஸ்பெஷல் – பவுத்திர கோலம்