கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பாரம்பரிய ரெசிபி, மாங்காய், மாங்காய் ஊறுகாய், ருசியுங்கள்

மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

மாங்காய் சீசனில் மாங்காய் பச்சடி செய்வதற்கு குறிப்பு வேண்டாமா? தமிழ் வருஷப் பிறப்பன்று கட்டாயம், மாங்காய் பச்சடியும் அதிலேயாவது இரண்டு வேப்பம் பூவை சேர்த்து வேப்பம்பூ பச்சடியும் செய்வார்கள். மாங்காய், மட்டரக மாம்பழங்கள் எது இருந்தாலும் பச்சடி செய்து விடலாம். புளிப்பு மாம்பழமானாலும் வேக வைத்து, வெல்லம் சேர்த்து, காரமும் சேர்ந்தால் பச்சடி ஏக ருசியாகத் தானிருக்கும் பிடித்தவர்களுக்கு. வயதானவர்களுக்கு கேட்கவே வேண்டாம். பாருங்கள், யாருக்கு இஷ்டமோ, அவர்களும் குறிப்பு விரும்பவர்களும் அட்லீஸ்ட், பிறருக்கு சொல்வதற்காவது உபயோகப்படும்.… Continue reading மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

ஆவக்காய் ஊறுகாய், கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பாரம்பரிய ரெசிபி, மாங்காய், மாங்காய் ஊறுகாய், ருசியுங்கள்

ஓ…இதுதான் ஆவக்காய் ஊறுகாயா?!

ருசி -12 ஆந்திர மாநிலத்தின்  புகழ் பெற்ற ஊறுகாய். ஊறும் + காய் = ஊறுகாய். எண்ணெயில் ஊறும் காயிது. உடன் நெய்யும் சேர்த்துச் சாப்பிடுபவர்களும் உண்டு. இந்த ஊறுகாய் வருஷக்கணக்கில்கூட கெட்டுப்போகாது. அவர்கள் வேப்புடு, கந்தி ஸுன்னி,  ஆவகாயி என்று வரிசையாகச் சொல்லுவார்கள். வருவல், பருப்புப்பொடி, மாங்கா ஊறுகாய் எல்லாமிருந்தால் அவசரத்துக்கு ஒரு சாதம் வைத்தால் போதும், பச்சடி ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் சொன்னால், பச்சடி என்றால் தெலுங்கில் துவையலாம். பெருகு… Continue reading ஓ…இதுதான் ஆவக்காய் ஊறுகாயா?!

ஆவக்காய் ஊறுகாய், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பாரம்பரிய ரெசிபி, மாங்காய், மாங்காய் ஊறுகாய், மெந்தியமாங்காய், ருசியுங்கள்

நாவில் நீர் ஊறும் மெந்தியமாங்காய் செய்வது எப்படி?

ருசி -11இந்த சீஸனில் மாங்காய்கள் பலவிதமாகக் கிடைக்கும். சுலபமாக வெந்தியமாங்காய் தயாரித்தால் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். பிஞ்சு மாங்காயானால், அதாவது கொட்டை முற்றாமல், உள்ளே பருப்புடன் கூடியதாக இருந்தால், சாதாரணமாக உப்பு பிசறி கடுகு தாளித்துக் கொட்டினாலே போதும். ருசியாக இருக்கும். துளி இஞ்சியைத் தோல் சீவி, பொடியாய் நறுக்கிச் சேர்த்தாலும் ருசி அலாதிதான். அதே சற்று புளிப்புள்ளதாக இருந்தால்கூட ஒரு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்து கடுகு தாளித்துக் கொட்டினாலும் போதும்.… Continue reading நாவில் நீர் ஊறும் மெந்தியமாங்காய் செய்வது எப்படி?