காது, மருத்துவம்

குளிர் காலத்தில் நம்  செவிகளைப் பாதுகாப்பது எப்படி?

நோய்நாடி நோய் முதல் நாடி-52 ரஞ்சனி நாராயணன் மார்கழி முடிந்தும் இன்னும் குளிர் முடிந்தபாடில்லை. பருவ நிலை மாறும்போது நம் உடல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன.  அதீத குளிர், குளிர் காற்று, பனிஇவை பலருக்கு பலவிதமான தொந்தரவுகளைக் கொடுக்கின்றன. குளிர் காற்று தரும் நடுக்கம் தவிர இந்த குளிர்கால நோய்களும் சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. குளிர் காற்றினாலும்பனியினாலும் மூட்டு வலி, வீக்கம் முதலியவை வரக்கூடும். பனிக்கு நம் எலும்புகளில்  நெகிழ்வுத் தன்மை குறைவதால் இந்த குளிர் காலத்தில்… Continue reading குளிர் காலத்தில் நம்  செவிகளைப் பாதுகாப்பது எப்படி?

காது, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம்? இதோ மருத்துவம் சொல்லும் காரணம்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 51 ரஞ்சனி நாராயணன் காது வலி: காது சம்பந்தமான இந்த கட்டுரையை எழுதுவதற்காக நிறைய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு மிகவும் வியப்பான ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது பிற பாகங்களில் ஏற்படும் வலிகளை நமது மூளை சில சமயங்களில் காது வலி என்று தப்பாகப் புரிந்து கொண்டுவிடுமாம். பல வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடன் பத்திரிகையில் வெளிவந்த உச்சிமுதல் உள்ளங்கால்வரை என்கிற தொடரில் காது பற்றிய கட்டுரையில் இந்த தகவலைப்… Continue reading காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம்? இதோ மருத்துவம் சொல்லும் காரணம்!

காது, மருத்துவம்

மீண்டும் நோய்நாடி நோய்முதல் நாடி!

நோய்நாடி நோய்முதல் நாடி- 50 ரஞ்சனி நாராயணன் நமது மருத்துவக் கட்டுரை தொடரில் நீண்ட இடைவெளி. தவிர்க்க முடியாத காரணங்களினால் ஏற்பட்ட இந்த இடைவெளிக்கு முதலில் நம் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். இனி இப்படி ஆகாது; தொடர்ந்து வரும் என்றும் உறுதி கூறுகிறேன். ‘டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா?’ டெலிபோன் மணி போல சிரித்தால் பரவாயில்லை; காதுக்குள் எப்போதும் டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நிச்சயமாக மகிழ்ச்சியுடன் பாட முடியாது! காதினுள்… Continue reading மீண்டும் நோய்நாடி நோய்முதல் நாடி!

காது, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

ஒலி மாசு நம்மை எப்படி பாதிக்கிறது?

நோய்நாடி நோய்முதல் நாடி - 49 ரஞ்சனி நாராயணன் சுமார் இரண்டு மாதங்களாக இந்தத் தொடரை எழுத முடியாத சூழ்நிலை. மறுபடியும் இப்போது ஆரம்பிக்கிறேன். சொந்தக் கதையை சொல்லிவிட்டு பிறகு தொடரலாம் என்று நினைக்கிறேன். ஒரு முறை தொண்டைப்புண்ணுடன் ஜுரமும் சேர்ந்துகொண்டு வழக்கம்போல காது கொஞ்சம் தகராறு செய்ய ஆரம்பித்தது. மருத்துவர் சொன்னார்: ‘ஜுரம் இறங்கிய பின் வாருங்கள். காதுகளில் சேர்ந்திருக்கும் குரும்பை எடுத்து விடலாம். அதற்கு முன் ஒரு வாரத்திற்கு தினமும் இரவு படுக்கப்போகும் முன்… Continue reading ஒலி மாசு நம்மை எப்படி பாதிக்கிறது?

காது, காது கேளாமையை கண்டறிதல், காதுகேளாமை, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

காதுகேளாமையை இப்படி சரிசெய்யலாம்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 47 ரஞ்சனி நாராயணன் காதுகேளாமை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலைமை. அமெரிக்காவில் சுமார் 37 மில்லியன் மக்களுக்கு இந்த உலகம் அமைதியானதாகி விட்டது. உரையாடல் என்பது எங்கோ தொலைதூரத்தில் கேட்கும் கிசுகிசுப்பாகவும், இசை என்பது மெல்லிய ரீங்காரம் என்று ஆகியிருக்கிறது என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது. காது கேளாமை உங்களைத் தனிமைப்படுத்தி விடும். ஆரம்பத்திலேயே இந்தக் குறையை கண்டிபிடித்து சிகிச்சையை மேற்கொள்ளுவது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். கொஞ்சம் கொஞ்சமாகக் காது கேட்காமல் போகலாம்.… Continue reading காதுகேளாமையை இப்படி சரிசெய்யலாம்!