புத்தம் ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி (அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் கட்டுரைகளை பகுதி கட்டுரைகளாக பிரசுரித்து வருகிறோம். இந்த நூலின் பின் இணைப்புகளை கடந்த மூன்று பகுதிகளில் பார்த்தோம் அதன் தொடர்ச்சி…) மணிமேகலை நூலின் காலம் மணிமேகலையின் காலத்தை ஆதாரத்துடன் ஆராய்ந்து எழுதுவதென்றால் அது பெரியதோர் தனி நூலாக முடியும். ஆதலின், மிகச் சுருக்கமாக எழுதுவோம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை என்பதே… Continue reading மணிமேகலை இயற்றப்பட்ட காலம் : ஓர் சர்ச்சை
Category: மயிலை சீனி. வெங்கடசாமி
கடற்காவல் தெய்வம் மணிமேகலை!
புத்தம் ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி கடற்காவல் தெய்வம் மணிமேகலை சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர். இந்த மணிமேகலையைப் பற்றித் 'தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம். இந்த மணிமேகலையைக் கதைத்தலைவியாகக் கொண்டு, அவளது வரலாற்றினைக் கூறும் சீத்தலைச்சாத்தனாரியற்றிய காப்பியத்துக்கும் 'மணிமேகலை' என்பது பெயர். இந்த நூலினைப்பற்றித் 'தமிழ்ப்பௌத்த நூல்கள்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம். * இங்கு 'மணிமேகலை' என்னும் கடல் தெய்வத்தைப் பற்றி… Continue reading கடற்காவல் தெய்வம் மணிமேகலை!
புத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்!
புத்தம் ஓர் அறிமுகம் மயிலை சீனி.வெங்கடசாமி தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப் பட்டனவாகத் தெரிகின்றன. சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது 'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக்… Continue reading புத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்!
மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மக்கலி உண்டாக்கிய ஆசிவக மதம்!
புத்தம் : ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி ஆசீவக மதம் பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரிபுத்திரர் என்பவர். பாளிமொழியில் இப்பெயர் மக்கலிபுத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் 'கோசால' என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலிபுத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி… Continue reading மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மக்கலி உண்டாக்கிய ஆசிவக மதம்!
பெளத்தம் தமிழுக்குத் தந்த பாளிமொழிச் சொற்கள்!
புத்தம் : ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி தமிழில் பாளிமொழிச் சொற்கள் வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு பாஷைச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர்.… Continue reading பெளத்தம் தமிழுக்குத் தந்த பாளிமொழிச் சொற்கள்!