அரசியல், இந்தியா, குழந்தை வளர்ப்பு, சமூகம், பெண்

அனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா?

குட்டி ரேவதி இதனால், பதினாறு வயதிலேயே வயதுவந்தவர்கள் ஆகிறார்கள் ஆண்கள்! கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயதுவரம்பு 18லிருந்து 16 வயதாகக் குறைக்கும் சிறார் சட்ட மசோதா மேலவையில் நிறைவேறியுள்ளதன் அர்த்தத்தை, அதிலும் ஓர் ஆண் குற்றவாளியை முன்வைத்து செய்யப்பட்டிருப்பதால் இன்னும் பல பின்னணிகளுடன் இணைத்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும். அறுபதுவயதிலும் விடலைத்தனம் தொலைக்காத, சிறார் மனநிலையில் பொதுவெளியில் இயங்கும் மேதாவி ஆண்களை எந்த வயதின் வரம்பில் வைப்பது? ஆண்களின் விடலைத்தனமான சிந்தனைகள், கருத்துகளாக ஒலிக்கும் ஊடகங்களை அண்ணாந்து பார்க்கும்… Continue reading அனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா?

Advertisements
குழந்தை வளர்ப்பு, பெண், பெண்ணியம்

கூட்டு மனச்சாட்சிக்குக் குழந்தைகளை பலியிடலாமா?

Anangu Pathippagam டெல்லி மருத்துவ மாணவி ஜோதி சிங்கை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொன்ற இளம் குற்றவாளியின் விடுதலையை ஒட்டி குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளி சிறாரின் வயது குறைப்பு பற்றி பொது மக்களும் மனிதவுரிமை ஆர்வலர்களும் பரபரப்பாக வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கிறனர். ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினர் மகா பொதுசனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசை குழந்தைக் குற்றாவாளிகளின் வயதை 16ஆக குறைக்க வேண்டுமென்பதே. நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி எளிதாக்கி விடலாமே இதில் என்ன சிக்கல் என்கிறார்கள். சிக்கல்… Continue reading கூட்டு மனச்சாட்சிக்குக் குழந்தைகளை பலியிடலாமா?

பெண், பெண்ணியம்

பெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்?

தி. பரமேஸ்வரி புதிய அலையாகத் தோன்றிய சமூக வலைதளங்கள், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த பெண்களுக்கு வடிகாலாகவும் இயங்க விருப்பமிருந்தும் சிக்கல்களைச் சந்தித்த பெண்களுக்குப் பெரும் வாய்ப்பாகவும் அமைந்தது. முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவை இயக்குவதற்கு எளிதாகவும் அவரவருக்கான வட்டத்தில் இயங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும், அதனால் நிகழ்ந்த பெண்ணின் பாய்ச்சல் ஆண்களை எரிச்சல்படுத்தியிருக்கிறது. அறிவியலின் புதிய முன்னேற்றங்களான சமூக வலைதளங்களின் வருகைக்கு முன்னரும், ஆண் பெண்ணுடலைச் சுரண்டியே வந்திருக்கிறான். பெண்ணுடலின்மீதான வன்முறையில் காமமும் ஒரு வழிமுறையாகப் பயன்பட்டிருக்கிறது. உடலைத்… Continue reading பெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்?

சமூகம், பெண்

குடியில் வீழ்ந்த கணவன்; குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் மனைவி!

சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் செல்வதற்காக சாலையில் நின்றிருந்தோம். அப்போது அருகில் இருந்த டீக்கடையில் ஒரு பெண்மணி, அவசர அவசரமாக டீயை குடித்துக் கொண்டிருந்தார். நின்றிருந்த ஆட்டோ யாருடையது என்று கேட்பதற்குள், ஆட்டோவில் உட்கார்ந்து, காக்கி சட்டையை மாற்றியதும்தான் தெரியும். அந்த பெண்மணி ஆட்டோ ஓட்டுனர் என்று. அவர் பெயர் உமா மகேஸ்வரி. இதோ அவர் ஆட்டோ ஓட்ட வந்த காரணத்தை கேளுங்கள்... "வழக்கம்போல குடிதான் சார்.... என் வூட்டுகாரு டெய்லி குடிச்சுட்டு குடிச்சுட்டு வருவான். வேலைக்கும்… Continue reading குடியில் வீழ்ந்த கணவன்; குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் மனைவி!

சினிமா, பெண், பெண்ணியம்

அனிருத், சிம்பு வீட்டுப் பெண்களை நாம் ஏன் கண்டிக்க வேண்டும்?

நிலா லோகநாதன் அன்புள்ள கொற்றவை, இந்தப் பாடலுக்கு நீங்கள் பெண்கள் சார்பாகவும்,மக்கள் சார்பாகவும் ஆற்றியுள்ள எதிர்வினை மிகவும் நல்லதும் வரவேற்க்கப்பட வேண்டியதுமாகும். நானும் அவ்விடயத்தில் உங்களுடன் நிற்கிறேன். இருப்பினும், சிம்பு,அனிருத் வீட்டுப்பெண்களுக்கே மிகுதி வசைகள் போய்ச்சேருகின்றன. ஒரு குழந்தை நல்லவராவதும், கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்கிற கிளிஷே போல அவர்களுடைய அம்மாக்களை, அக்காக்களை, சகோதரிகளைத் திட்டுவது இன்னமும் நாம் பெண்களை மையப்படுத்தி, நம்மை நாம் மட்டறுக்கும் அரசியலைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. பீப் சோங்கில் உச்சரிக்கப்படும்… Continue reading அனிருத், சிம்பு வீட்டுப் பெண்களை நாம் ஏன் கண்டிக்க வேண்டும்?