பெண், பெண்ணியம்

இந்து பெண்களுக்கு நீதி மறுக்கும் பாஜக, முஸ்லிம் பெண்களுக்கு நீதி பெற்றுத் தந்துவிடுமா?

பிருந்தா காரத் முஸ்லிம் பெண்கள் தங்கள் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தலாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகவே அதனை ஆதரிப்பதில் எந்த வித கேள்வியும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் நாடுகளிலேயே இந்த தலாக் முறை இல்லை. மேலும் இந்நாடுகள் இது மதநம்பிக்கையின்பாற்பட்டதல்ல, ஆண் ஆதிக்கம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. பாலின நீதி குறித்து பாஜக-வின் சில பிரசங்கங்களையும், கருத்துகளையும் கண்டு ஆச்சரியமடைந்தேன். ஸ்யாமா பிரசாத் முகர்ஜி என்பவர்தான் பாஜக-வின் அரசியல் ஆதர்சம். இவர் இந்து சட்ட சீர்த்திருத்தங்களை… Continue reading இந்து பெண்களுக்கு நீதி மறுக்கும் பாஜக, முஸ்லிம் பெண்களுக்கு நீதி பெற்றுத் தந்துவிடுமா?

குழந்தை வளர்ப்பு, பெண்

இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்

அமுதா சுரேஷ் ஒரு காளையை வளர்ப்பவன் ஜல்லிகட்டிற்காக அதைப் பயன்படுத்த அனுமதி கிடையாது, ஒரு நாயை வளர்ப்பவன், அதை துன்புறுத்துவதற்கு அனுமதி கிடையாது, அதெல்லாம் மிருக வதை, சட்டங்கள் பாயும்,வரவேற்கிறேன்! ஆனால், ஒரு பெண்ணை மணந்ததால் அவள் என் மனைவி என்று சாலையில், வீட்டில் துன்புறுத்துவதும், குழந்தையைப் பெற்று விட்டதால், அந்த உரிமையில் தன் கண்மூடித்தனமான அபிமானத்தையோ, சில ஆயிரம் பணத்துக்காகவும், அந்தக் குழந்தைகள் கதற கதற பச்சை குத்தவும், அலகு குத்தவும் செய்யும் போது, ஏன்… Continue reading இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்

பெண், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்

“அடிடா அவளை, வெட்றா அவளை”!

அமுதா சுரேஷ் ஒருதலையாகக் காதலித்து, பெண்ணின் மறுப்பைத் தாங்க முடியா "தி சோ கால்ட் ஆண்களின்" வன்முறைகளை யோசித்துப் பார்க்கும் போது, பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று, பஜ்ஜி சொஜ்ஜி சகிதம் பட்டாளத்துடன் போய், பெண் நெட்டை, குட்டை, மூக்கு சரியில்லை, முழி சரியில்லை என்று பெண்களை விமர்சித்து, அக்கா வேண்டாம் தங்கையைக் கொடுங்கள் என்று கூச்சமில்லாமல் பேசும் ஆண்களை எல்லாம் சம்பந்தப்பட்ட பெண்கள் இதுவரை ஏன் வெட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது பர்முடாஸ் என்ற பெயரில்… Continue reading “அடிடா அவளை, வெட்றா அவளை”!

பெண்

”என்னால் முடியும்”: ஃபேஸ்புக்கில் வைரலான பணிபுரியும் ஒரு அம்மாவின் பதிவு!

“இங்கே தரையில் படுத்திருப்பது குழந்தையல்ல. எனது இதயம்தான், தரையில் கிடக்கிறது. அவனுக்கு காய்ச்சல் இருக்கிறது. எனவே, வேறு யாரிடமும் சேர்ந்து இருக்க மறுக்கிறான். எனது பணியில் பாதி நாள் முடிந்துவிட்டது. ஒரு லோன் விடுவிக்கும் பணியில் நான் இருப்பதால் என்னால் லீவும் போட முடியவில்லை. காய்ச்சலில் அவதிப்படும் குழந்தையையும் பார்த்துக் கொண்டு அலுவலகத்திலும் என்னால் பணிபுரிய முடிகிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதை சட்டசபையில் தூங்கும் தூங்கும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தவே” என்று புனேயைச் சேர்ந்த வங்கி ஊழியர் சுவாதி சிதால்கர்… Continue reading ”என்னால் முடியும்”: ஃபேஸ்புக்கில் வைரலான பணிபுரியும் ஒரு அம்மாவின் பதிவு!

பெண், பெண் எழுத்தாளர், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்

பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது!: எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி

எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள்… Continue reading பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது!: எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி