சினிமா, சின்னத்திரை, பெண் இயக்குநர்

கமர்ஷியல் படம் இயக்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!

குணசித்திர நடிகையாக பெயர் எடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோகணம் என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டிய இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல படம் என்று பெயர் வாங்கியது. அதற்குப் பிறகு ஜீ தமிழின் பிரபல டாக் ஷோவான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பாளரானார். தற்போது கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் லட்சுமி. படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

கோலிவுட், சினிமா, நித்யா மேனன், பெண் இயக்குநர், மாலினி 22 பாளையங்கோட்டை

ஏமாற்றும் ஆண்களை பழிவாங்கும் கதையே மாலினி 22 பாளையங்கோட்டை!

ஸ்ரீப்ரியா இயக்கும் மாலினி 22 பாளையங்கோட்டை படம் பெண்களை ஏமாற்றும் ஆண்களை பழிவாங்கும் கதை. இதை சுவாரஸ்யமான விதத்தில் சொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறார் ஸ்ரீப்ரியா. இதில் நித்யா மேனன், கிரீஷ் கே. சதார் மைய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  

சினிமா, நித்யா மேனன், பெண் இயக்குநர், மாலினி 22 பாளையங்கோட்டை

ஸ்ரீப்ரியா இயக்கும் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ – பூஜை படங்கள்

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘22 ஃபீமேல் கோட்டயம்’ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை ஸ்ரீப்ரியா இயக்குகிறார். இதில் நித்யா மேனன், கிரீஷ் கே. சதார் மைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் பூஜை நடைபெற்றது.