இந்தியா, பெண், பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் ஆணையத்துக்கு கைது அதிகாரத்தை வழங்க முடியாது: மத்திய சட்ட அமைச்சகம்

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் அதிகாரத்தை தேசிய மகளிர் ஆணையத்துக்கு வழங்க மத்திய சட்ட அமைச்சகம் மறுத்து விட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் விவகாரத்தில், மனித உரிமைகள் அமைப்புக்கு நிகரான அதிகாரம் கொண்ட அமைப்பாக தேசிய மகளிர் ஆணையத்தை மாற்றும் வகையில், சட்ட அமைச்சகத்துக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் சில பரிந்துரைகளை அளித்திருந்தது. அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரையும், மகளிர் ஆணையத்தின் சம்மன்களை நிராகரிப்போரையும்… Continue reading பெண்கள் ஆணையத்துக்கு கைது அதிகாரத்தை வழங்க முடியாது: மத்திய சட்ட அமைச்சகம்

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, பெண், பெண் அரசியல்வாதிகள், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்

`கவுரவ’ கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் : ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

‘கவுரவக்’ கொலைகளைத் தடுக்க மத்திய அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு சேலத்தில் கேப்டன் லட்சுமி-சியாமளி குப்தா நினைவரங்கில் நடைபெற்று வருகிறது. என்.அமிர்தம், வாலண்டினா மற்றும் ஆர்.சந்திரா தலைமையில் வெள்ளியன்று துவங்கிய மாநாடு சனிக்கிழமை தொடர்ந்து நடை பெறுகிறது. மாநாட்டை உழைக்கும் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் எம்.மகாலட்சுமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர்… Continue reading `கவுரவ’ கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் : ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

அரசியல், இந்தியா, பெண், பெண்கள் பாதுகாப்பு

‘நிர்பயா’ மையம் மாநில அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது: மேனகா காந்தி

பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவும் ‘நிர்பயா’ மையங்களை நாடு முழுவதும் தொடங்குவதற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறினார். ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கும் மேனகா காந்தி செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார். மேலும் அவர்,‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு மருத்துவ உதவி, காவல்துறை உதவி, மன நல ஆலோசனை, சட்ட உதவி மற்றும் தாற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை ஒரே இடத்தின் கீழ்… Continue reading ‘நிர்பயா’ மையம் மாநில அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது: மேனகா காந்தி

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சேமிப்பது எப்படி?, பெண்கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, வணிகம்

பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள்!

பட்ஜெட் 2014 -2015 பொது பட்ஜெட்டில் பெண்களுக்கென்று வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. நடுத்தர, ஏழை பெண்களோ, பணிபுரியும் பெண்களோ பயனடையும் வகையில் திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேம்போக்கான, நிதி ஒதுக்கீடு செய்து கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சென்ற மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நிர்பயா நிதி என்று 100 கோடி ஒதுக்கீடு… Continue reading பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள்!

அரசியல், அரசியல் பேசுவோம், பெண், பெண்கல்வி, பெண்களின் சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்

இன்னும் எத்தனை பெண்களை கொல்வீர்கள்!

இதுவும் கடந்துபோகுமோ? ஜோ. ராஜ்மோகன் பொள்ளாச்சியில் தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபைக்குச் சொந்தமான மாணவர் விடுதியில் நள்ளிரவில் 10 மற்றும் 11 வயதுள்ள இரண்டு சிறுமிகளை சமூக விரோதிகள் கத்தியை காட்டி மிரட்டி தூக்கிச் சென்று அருகில் இருந்த கட்டிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத இக்கொடுமைக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்டோர் ஆழ்ந்த கவலையையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட் டத்தில் உள்ள கட்ரா கிராமத்தில் கடந்த மே… Continue reading இன்னும் எத்தனை பெண்களை கொல்வீர்கள்!