மேலே இருக்கும் கார்ட்டூன் பிரிட்டன் நோபல் அறிவியலாளர் டிம் ஹண்ட்டின் கருத்தை ஒட்டி இண்டிபெண்டண்ட் இதழ் வெளியிட்டது. ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. 2000ன் ஆரம்பங்களில்கூட இந்தியாவில் பத்திரிகை துறை உள்பட பல துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். புலனாய்வுப் பத்திரிகைகள் ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக பெண் நிருபர்களை பணியமர்த்த மறுத்தன. இன்றும்கூட தமிழக புலனாய்வுப் பத்திர்கைகளில் ஒரு பெண் நிருபர்கூட இல்லை. இதே பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில்… Continue reading பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்
Category: பெண்களுக்கான வேலைவாய்ப்பு
பெண்கள் தின சிறப்புக் கட்டுரை: ’இனிக் கண்ணாடிக்கூரை இல்லை, நீல வானம் மட்டுமே!
சிறப்புக் கட்டுரை ஞா.கலையரசி கண்ணாடிக்கூரை (GLASS CEILING) என்றால் என்ன? மிகப் பெரிய வணிக நிறுவனங்களிலும், பன்னாட்டுக் கம்பெனிகளிலும் மிக உயர்ந்த நிர்வாகப் பதவிகளுக்கான ஏணியில், பெண்கள் எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும், சாதனையாளர்களாக இருந்தாலும் பாதிக்கு மேல் ஆண்களுக்கிணையாக ஏற முடியாமல், தடுக்கும் சுவரைத் தான், கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.இதனைத் தடுப்புச்சுவர் அல்லது முட்டுக்கட்டை என்றும் பொருள் கொள்ளலாம். 1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம், மிஸ்… Continue reading பெண்கள் தின சிறப்புக் கட்டுரை: ’இனிக் கண்ணாடிக்கூரை இல்லை, நீல வானம் மட்டுமே!
சிறுதானிய உணவகம் நடத்தும் எம்பிஏ பட்டதாரி!
சிறுதானியங்கள் உண்பதால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் கிடைக்கும்’, ‘நீரிழிவு பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்’, ‘கொழுப்புச் சத்தைக் குறைக்கலாம்’, ‘மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்’, ‘கேன்சர் நோய் வராமல் தடுக்க முடியும்’ எப்படி? தானியங்களை சுழற்சி முறையில் உட்கொள்வதால்! சிறுதானியங்களின் மகத்துவத்தை உணர்த்தும் அர்த்தம் பொதிந்த இந்த வாசகங்களை வெறுமனே அறிவுரையாக மட்டும் சொல்லிவிடாமல் நடைமுறைப்படுத்தி, நிரூபித்தும் வருகிறார் லட்சுமி. உடுமலைப் பேட்டையில் ‘ஆரோக்யம் – இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம்’ என்கிற சிறுதானிய உணவு… Continue reading சிறுதானிய உணவகம் நடத்தும் எம்பிஏ பட்டதாரி!
பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள்!
பட்ஜெட் 2014 -2015 பொது பட்ஜெட்டில் பெண்களுக்கென்று வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. நடுத்தர, ஏழை பெண்களோ, பணிபுரியும் பெண்களோ பயனடையும் வகையில் திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேம்போக்கான, நிதி ஒதுக்கீடு செய்து கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சென்ற மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நிர்பயா நிதி என்று 100 கோடி ஒதுக்கீடு… Continue reading பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள்!
ஹேங்கிங் தோடுகள் செய்வது எப்படி? விடியோ பதிவு
ஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் எளிதான ஒன்று ஹேங்கிங் தோடுகள் செய்வது. கடைகளில் கிடைக்கும் விதவிதமான ஹூக்குகள், மணிகளை தேர்வு செய்வதில்தான் நம்முடைய கடினமான பகுதி இருக்கிறது. இவற்றை வைத்து எப்படி ஹேங்கிங் தோடுகளை உருவாக்குவது என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவையானவை ஹூக்குகள், மணிகள், கட்டிங் பிளையர், சிறிய அளவிலான தங்க நிற மணிகள் மற்றும் மொட்டு கம்பிகள் செய்முறையை விடியோவில் பாருங்கள்... http://www.youtube.com/watch?v=kLe854NsDNI ஃபேஷன் ஜுவல்லரி கற்க விரும்புவோர் இந்த முகவரியில்… Continue reading ஹேங்கிங் தோடுகள் செய்வது எப்படி? விடியோ பதிவு