செல்வ களஞ்சியம் – 79 ரஞ்சனி நாராயணன் செல்வ களஞ்சியமே இந்த வாரம் கொஞ்சம் வேறு வழியில் போகிறது. அடுத்த வாரத்திலிருந்து வழக்கம்போல தொடரும். சென்ற வாரம் நண்பரின் மகள் பெரியவளாகிவிட்டாள் என்ற செய்தி தெரிந்தது. அந்தப் பெண்ணின் தாயாரிடம் தொலைபேசியில் என் சந்தோஷத்தைத் தெரிவித்தேன். எனக்கு நன்றி கூறியவரின் குரலில் என்னளவு சந்தோஷம் தொனிக்கவில்லை. ‘இன்னும் வயசே ஆகலைங்க அதுக்குள்ள...’ என்றார். ஒரு அம்மாவிற்கே உரிய கவலையுடன். உண்மைதான். நம்மூரில் பெண் குழந்தை பிறக்கும்போதே கவலையும்… Continue reading பூப்பெய்தும் குழந்தைகளை கையாள்வது எப்படி?
Category: பெண்களின் சுகாதாரம்
மாதவிடாய் குறும்படம் அறிமுகம்
எழுத்து: இரா.உமா “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” - கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்திருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனைகளையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் கீதா. இதில் இடம்… Continue reading மாதவிடாய் குறும்படம் அறிமுகம்
இன்னும் எத்தனை பெண்களை கொல்வீர்கள்!
இதுவும் கடந்துபோகுமோ? ஜோ. ராஜ்மோகன் பொள்ளாச்சியில் தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபைக்குச் சொந்தமான மாணவர் விடுதியில் நள்ளிரவில் 10 மற்றும் 11 வயதுள்ள இரண்டு சிறுமிகளை சமூக விரோதிகள் கத்தியை காட்டி மிரட்டி தூக்கிச் சென்று அருகில் இருந்த கட்டிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத இக்கொடுமைக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்டோர் ஆழ்ந்த கவலையையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட் டத்தில் உள்ள கட்ரா கிராமத்தில் கடந்த மே… Continue reading இன்னும் எத்தனை பெண்களை கொல்வீர்கள்!
அரசு பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நேரும் அவலங்கள்!
அரசு பள்ளிகளின் மீதான வெறுப்புக்கு முதன்மையான காரணம், அங்கு சரியான கழிப்பிட வசதி இல்லை என்பது. அதுவும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான பிரத்யேக வசதி கொண்ட கழிப்பறைகள் அமைத்துத் தருவதில் அரசு அக்கறை காட்டுவதே இல்லை. அரசு பள்ளிகளின் மேல் உள்ள இதுபோன்ற குறைகளை களப்பணியாற்றி சேகரித்திருக்கிறது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. பெண்களுக்கு பிரத்யேகமான கழிப்பறை வசதியும் இல்லை. குறிப்பாக பெண்களுக்கான கழிவறைகள், SANITARY NAPKIN DESTROYER, வசதிகள் கொண்ட GIRLS FRIENDLY TOILET என்ற முறையில்… Continue reading அரசு பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நேரும் அவலங்கள்!
பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை!
உமா சக்தி எழுத்தாளர்/பத்திரிகையாளர் ஒரு பெண் வேலைக்குப் போவது அவளது பொருளாதாரச் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, அவளுடைய சுயம் சார்ந்த தேவையும், அறிவுத் தேடலின் சாரமாகவும் தான். தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்ற ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். சுறுசுறுப்பும், ஆளுமையும், அறிவுத் திறனும் பெண்களை துறை சார்ந்த வல்லுனர்களாக எளிதில் முன்னேற்ற பாதைக்கு உயர்த்திச் செல்கிறது. ஆனால் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டால் பெண்கள் என்ன என்ன பிரச்சனைகள் அனுபவிக்க வேண்டியுள்ளது? பார்வைகள், கேலிப் பேச்சுகள்… Continue reading பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை!