சினிமா, பெண்கல்வி

சென்னையில் ஸ்ரீதேவி!

சத்யபாமா பல்கலைகழகத்தில் பெண்களுக்கென்றே பிரத்யெகமாக நடைபெற்ற "ஃபெம் ஃபெஸ்ட் '14" என்னும் கல்சுரலஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பளிச்சென்ற நீல நிற ஷர்ட் மற்றும் வெள்ளை ஃபேண்ட் அணிந்திருந்த அவர், இரண்டே வரிகளில் தனது உரையை முடித்துகொண்டாலும், அங்கு கூடியிருந்த அனைத்து இளம்பெண்களின் மனதையும் வசீகரிக்க தவரவில்லை. ’’என்னை இங்கு சிறப்பு விருந்தினராக அழைத்து "ஐகான் அவார்ட்" அளித்த ஜேப்பியார் அவர்களுக்கு நன்றி. தமிழ் நாட்டில் சிறந்த பல்கலைகழகங்கலுள் ஒன்றான சத்தியபாமாவில் பயிலும்… Continue reading சென்னையில் ஸ்ரீதேவி!

அரசியல், சமூகம், பெண்கல்வி, பெண்களின் சுகாதாரம்

அரசு பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நேரும் அவலங்கள்!

அரசு பள்ளிகளின் மீதான வெறுப்புக்கு முதன்மையான காரணம், அங்கு சரியான கழிப்பிட வசதி இல்லை என்பது. அதுவும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான பிரத்யேக வசதி கொண்ட கழிப்பறைகள் அமைத்துத் தருவதில் அரசு அக்கறை காட்டுவதே இல்லை.  அரசு பள்ளிகளின் மேல் உள்ள இதுபோன்ற குறைகளை களப்பணியாற்றி சேகரித்திருக்கிறது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. பெண்களுக்கு பிரத்யேகமான கழிப்பறை வசதியும் இல்லை. குறிப்பாக பெண்களுக்கான கழிவறைகள், SANITARY NAPKIN DESTROYER, வசதிகள் கொண்ட GIRLS FRIENDLY TOILET என்ற முறையில்… Continue reading அரசு பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நேரும் அவலங்கள்!

பெண்கல்வி, பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்

முதல் பெண் பட்டதாரியின் கதையை எழுதுங்கள்!

பெண்கல்வியின் முக்கியத்துவத்தை நாம் உணர ஆரம்பித்ததே பிரிட்டீஷாரின் வருகைப் பிறகுதான். சுதந்திரப் போராட்டத்தில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்றோர் மக்களிடையே அதை முன்னெடுத்துச் சென்றனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட பெண்களின் கல்வி உரிமைக்காக மகாத்மா ஜோதிபாய் புலே, பெரியார் குரல் கொடுத்தனர். சுதந்திரம் கிடைத்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே, பெண்கள் கல்விச்சாலைகளுக்கு வர முடிந்தது. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பெண்கல்வியின் சராசரி அளவு 50 சதவிகிதத்தை எட்ட முடிந்திருக்கிறது. இன்னும்… Continue reading முதல் பெண் பட்டதாரியின் கதையை எழுதுங்கள்!