குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பண்டிகை, பாரம்பரிய திண்பண்டம், பாரம்பரிய தின்பண்டம், பாரம்பரிய ரெசிபி, பாரம்பரியம்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் – அரிசி அல்வா!

பண்டிகை ஸ்பெஷல்! கிறுஸ்துமஸ் ஸ்பெஷலுக்கு ஏதாவது சமைக்கலாம் என்று நினைப்பவர்கள் இந்த அரிசி அல்வாவை முயற்சித்துப் பார்க்கலாம். தென் மாவட்டங்களில் கிறிஸ்துமஸின்போது இந்த பண்டம் நிச்சயம் இருக்கும். தேவையானவை: பச்சரிசி - அரை கிலோ வெல்லம் - அரை கிலோ தேங்காய் - 3 மூடி ஏலக்காய் தூள் - 2 டீஸ்பூன் முந்திரி, திராட்சை - ஒரு கைப்பிடி நெய் - 2 கப் எப்படி செய்வது? அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை… Continue reading கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் – அரிசி அல்வா!

சமையல், சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பெயர் வந்தது எப்படி?, சாம்பார் பொடி, செய்து பாருங்கள், தக்காளி ரசம், பாரம்பரிய ரெசிபி

பருப்புருண்டை ரசம்!

ருசி காமாட்சி மகாலிங்கம் பருப்புருண்டைக் குழம்பு என்று சொல்பவரா நீங்கள்?  எது சொன்னாலும் பரவாயில்லை. அதற்கேற்ப ருசியைமாற்றிஅமைத்துவிடலாம்.கிராமத்து சமையல்தானிதுவும். துவரம்பருப்பு கடையில் வாங்குகிறோமே அதை  வீட்டிலேயே ஒரு வருசத்திற்கு வேண்டியதை  தயாரிப்பது வழக்கம். துவரை வாங்கி முளைகட்டி, ஊறவைத்து, காயவைத்து, உடைத்து என ஒரு ஒர்க் ஷாப்பே செயல்படும். இந்நாளில் முளைகட்டி ஸ்ப்ரவுட்ஸ் என வழங்கப் படுவதை துவரையை பருப்பாக செய்யுமுன்னரே அதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மொத்தமாக துவரையை வாங்கி ஊற வைப்பார்கள். இரவு தண்ணீரை வடித்துவிட்டு … Continue reading பருப்புருண்டை ரசம்!

சமையல், பாரம்பரிய ரெசிபி

பிடி கருணைக்கிழங்கு மசியல்!

ருசியுங்கள் காமாட்சி மகாலிங்கம் என்ன பிடிகருணைக் கிழங்கா? காரல் இருக்குமே அதுவா என்று கேட்கிறீர்களா? அதுவேதான். வருஷம் பூராவும் கிடைக்கக் கூடியது. கிழங்கில் வாயுப் பொருட்கள் கிடையாது.  காவிரிக் கரையோரப்பகுதிகளில் அதிகம் விளைவதால்   முன்பெல்லாம் அங்கு   சமையல் அறையிலேயே மணலைப் பரப்பி  அதில் கிழங்குகளைப் பாதுகாத்து வருவார்கள். வீட்டில்  தோசை, இட்டிலிக்கான   நெல்லைப் புழுக்கும்போது அந்த நெல்லிடையே  கிழங்குகளையும்  வைத்துப் புழுக்கி எடுப்பார்கள். இதெல்லாம் சின்ன வயதில் மாயூரம் போனபொழுது,  அதனையடுத்த கிராமங்களில் இதைப் பார்த்திருக்கிறேன். அந்தக்… Continue reading பிடி கருணைக்கிழங்கு மசியல்!

சமையல், ஜன்னலோரம், பாரம்பரிய ரெசிபி

ருசி குறையாமல் மிளகுக் குழம்பு செய்யலாம்!

ருசியுங்கள் காமாட்சி மஹாலிங்கம் நிறையகுழம்பு வகைகள் எல்லோரும் சாப்பிட்டிருப்பீர்கள். சாதாரணமாக காரத்திற்கு அதிகம் மிளகாய்தான் சேர்ப்பார்கள். வாசனைக்காக சிறிது மிளகு சேர்ப்போம். ஆனால் இந்தக் குழம்பு மிளகு காரத்தை மட்டும் சேர்த்து,  விசேஷமாக நான் தயாரிப்பது உண்டு. நீங்கள் மட்டும்தானா?  நாங்களும் தயாரிப்பது உண்டு என்றுதானே சொல்வீர்கள்.  பரவாயில்லை,  இது வெங்காயமும், பூண்டும் சேர்த்துச் செய்தேன். மிளகுக் குழம்பு என்றால்  பத்தியச் சாப்பாடுதான் ஞாபகம் வரும். வாயிற்கும் ருசியைக் கொடுக்கும். வயிற்றிற்கும் நல்லது. என்ன கொஞ்சம் கலராயிருக்காது.… Continue reading ருசி குறையாமல் மிளகுக் குழம்பு செய்யலாம்!

சமையல், நீங்களும் செய்யலாம், பாரம்பரிய ரெசிபி, மைசூர் ரசம்

மழைக்கு இதமான மைசூர் ரசம்!

ருசி வேண்டியவை : துவரம் பருப்பு -அரைகப் புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு தக்காளிப்பழம் –பழுத்ததாக மூன்று வறுக்க சாமான்கள் தனியா – மூன்று டேபிள் ஸ்பூன் மிளகு - ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய்  – மூன்று கடலைப் பருப்பு - இரண்டு டீஸ்பூன் சீரகம் - இரண்டு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன் ருசிக்கு உப்பு நெய் இரண்டு ஸ்பூன் தாளிக்க - கடுகு, பெருங்காயம் வாசனைக்கு… Continue reading மழைக்கு இதமான மைசூர் ரசம்!