கல்வி - வேலைவாய்ப்பு, சினிமா, நடிகர்கள்

ஆங்கில நாடகங்களில் நடிக்க நடிகர்கள் தேவை!

அலைபாயுதே, யாரடி நீ மோகினி, வெப்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் கார்த்திக் குமார்,தன் நண்பர் சுனில் விஷ்ணு கே’வுடன் இணைந்து இவாம் என்கிற பெயரில் நாடக் குழு நடத்தி வருகிறார். சென்னையின் பிரபல இந்தக் குழுவில் பணியாற்ற பகுதி/முழுநேர நாடக கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் mail@evam.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஜூலை 10 இறுதி நாள்.  

சினிமா, நடிகர்கள்

விஜய் ஆண்டனியின் சலீம்: முதல் பார்வை

நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.  அடுத்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் சலீம். நான் படத்தில் வந்த சலீம் என்கிற கதாபாத்திரத்தின் பெயரே படத்திற்கு வைத்திருப்பதாக சொல்கிறார் விஜய் ஆன்டனி. படத்தை அறிமுக இயக்குநர் என்.வி.நிர்மல் இயக்குகிறார். கதாநாயகியாக அக்ஷா நடிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக சலீம் தயாராகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

சினிமா, நடிகர்கள்

டிவி அனுபவம் சினிமாவில் உதவுகிறதா? – ப்ரஜின் பேட்டி

ஷாருக்கான், மாதவன், தொடங்கி சிவகார்த்திகேயன் வரை சின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்து வெற்றி பெற்றவர்களின் வரிசை தொடர்கிறது. இந்த டிவி டு மூவி வரிசையில் இணைந்திருக்கும் இன்னொரு நடிகர் ப்ரஜின். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த வீடியோஜாக்கி ப்ரஜின், இப்போது சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் 'மணல் நகரம்' படப்பிடிப்பை முடித்துவிட்டு துபாயிலிருந்து வந்தவரிடம் பேசிய போது.. டிவியிலிருந்து சினிமாவுக்கு என்று வந்தவர் நீங்கள். சினிமாவில் நுழைய இது சுலபமான வழியா? அப்படிச் சொல்ல… Continue reading டிவி அனுபவம் சினிமாவில் உதவுகிறதா? – ப்ரஜின் பேட்டி

சினிமா, நடிகர்கள், நஸ்ரியா

திருமணம் என்னும் நிக்காஹ் நஸ்ரியா பிரத்யேக படங்கள்

     

சினிமா, நடிகர்கள், பிரபலங்களின் திருமணம்

‘ஜகன்மோகினி’ ராஜா திருமண வரவேற்பு பிரத்யேக படங்கள்!

தெலுங்கில் பிரபலமான நடிகர் ராஜா. பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். ஆந்திரா போய் தெலுங்கில் 32 படங்கள் நடித்துள்ளார். அவற்றில் பல வெற்றிப் படங்கள். இவர் ஐந்து படங்கள் மாநில அரசின் விருதுகளைக் குவித்த படங்கள். 'ஆனந்த்' படவெற்றிக்குப் பின் 'ஆனந்த்' ராஜா என்று அழைக்கப்பட்டார். சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மகள் அம்ரிதாவை மணந்தார் ராஜா. அம்ரிதா தகவல் தொடர்பு பட்டம் முடித்து பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் ப்ராஜக்ட் மேனேஜராக இருப்பவர். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த… Continue reading ‘ஜகன்மோகினி’ ராஜா திருமண வரவேற்பு பிரத்யேக படங்கள்!