சென்ற பதிவில் குந்தன் மோடிஃப்களை வைத்து ஃபேஷன் ஜுவல்லரியை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். இந்த பதிவில் நாம் கற்க இருப்பது கிறிஸ்டல் பென்டன்ட் செட்டை எப்படி கோர்ப்பதை.. ஃபேஷன் ஜுவல்லரி கற்க ஆரம்பித்திருப்பவர்கள் இதுபோன்ற எளிமையான டிசைன்களை செய்து பார்க்கலாம். பென்டன்டுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு ஏற்றற்போல மணிகளை தேர்ந்தெடுத்து கோர்ப்பதிலும் நீங்கள் கிரியேடிவிட்டி காட்டினால் நீங்கள் உருவாக்கிய படைப்பு நிச்சயம் பேசப்படும். சரி.. செய்முறைக்குப் போவோமா? இந்த செய்முறையை விடியோவில் காண இங்கே க்ளிக்குங்கள். என்னென்ன… Continue reading கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி!
Category: தொழில்
ஃபேஷன் ஜுவல்லரி – கிறிஸ்டல் நெக்லஸ் செய்முறை!
ஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் அழகான ரெயின் ட்ராப் (மழை துளி) கிறிஸ்டல் நெக்லஸ் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவையானவை கோல்டன் செயின், மணிகள், கட்டிங் பிளையர், சிறிய அளவிலான தங்க நிற மணிகள் மற்றும் மொட்டு கம்பிகள் ஃபேஷன் ஜுவல்லரி செய்யத் தேவையான பொருட்கள் வேண்டுவோர், தேவையான விவரங்களுடன் fourladiesforum@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு எழுதுங்கள்.
சுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி!
சுயதொழில் செய்யவதற்கான தேடலில் நிறைய பேர் நம்முடைய தளத்திற்கு வருகை தருகிறார்கள். இமெயில் மூலமாகவும் சிறுதொழில் ஆலோசனை தேவை என்று ஆவலோடு கேட்கிறார்கள். சிறுதொழில் செய்ய விரும்புகிறவர்கள் அரசு தரும் பயிற்சிகளின் மூலமாக கற்றுக்கொள்வது பயனுள்ள வழி என்பதை சொல்ல விரும்புகிறோம். அரசின் சான்றிதழ் கிடைப்பதோடு, வழிகாட்டலும் வங்கி கடனும் இங்கே பயிற்சி எடுத்துக் கொள்வதன் மூலமாக சாத்தியப்படும். அந்தவகையில் மத்திய அரசின் MSME பல்வேறு சிறுதொழில் வாய்ப்புகளை அளிக்கிறது. மேலதிக தகவல்களைத் தருகிறார் தொழில் வளர்ச்சி இயக்கத்தின்… Continue reading சுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி!
ஃபேஷன் ஜுவல்லரி – பாரம்பரிய தோற்றம் தரும் மணிமாலை!
நீங்களே செய்யலாம் முந்தைய பதிவுகளில் ஃபேஷன் ஜுவல்லரி செய்முறைகளில் அடிப்படையான சிலவற்றைக் கற்றிருப்பீர்கள். இந்த அடிப்படையான கற்றலை வைத்தே விதவிதமான டிசைன்களை உருவாக்க முடியும். அதில் எளிய, ஆனால் மிக அழகான ஒரு வகை மணிமாலை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இதெல்லாம் தேவையான பொருட்கள்! வித்தியாசமான ஷேப்பில் கோல்டன் மணிகள், சிவப்பு கண்ணாடி மணிகள், கோல்டு அல்லது மெட்டல் கம்பிகள், ஹுக் அண்ட் ஐ வகையான இணைப்பான், பீட் ஸ்பேசர்கள், இணைப்புக்கான கருவி பிளையர்ஸ் எப்படி… Continue reading ஃபேஷன் ஜுவல்லரி – பாரம்பரிய தோற்றம் தரும் மணிமாலை!
உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?
முன்பெல்லாம் ஒரு கலைப் பொருளை செய்தால், அதைச் செய்த நாமே அழகு பார்த்துக் கொண்டிருப்போம். விற்பனைக்கு அனுப்புவது பற்றியெல்லாம் நம்மால் யோசிக்கவே முடியாது. நாம் உருவாக்கிய கலைப் பொருள் போலவே நம்முடைய கனவுகளும் மூலைக்குப் போய்விடும். இந்த சூழல் இப்போது மெல்ல மெல்ல மாறிவருகிறது. அமைந்தகரையில் இருந்தபடியே நீங்கள் உருவாக்கிய பொருளை அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ விற்றுவிட முடியும். எப்படி என்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான ஆன்லைன் வர்த்தக மையத்தை ஏற்படுத்தியிருக்கிறது etsy.com.… Continue reading உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?