தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறால் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி ஜூலை 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைகழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மீன்வள விரிவாக்கத் துறை மூலமாக ‘வளங்குன்றா இறால் வளர்ப்பு பண்ணை மற்றும் உற்பத்திக்கான சிறந்த மேலாண்மை முறைகள்’ என்ற பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில் இறால் வளர்ப்போர், இறால் பண்ணையில் பணிபுரிவோர், இறால்… Continue reading வேலையற்ற இளைஞர்களுக்கு இறால் வளர்க்க இலவச பயிற்சி!
Category: தொழில் தொடங்க ஆலோசனை
நகரங்களிலும் மண்புழு உரம் தயாரிக்கலாம்!
புத்தக அறிமுகம் மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழிற்நுட்பமும் பயன்களும் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002 தொலைபேசி: 04259 226012 கைபேசி: 98650 05084 மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com அதிகரித்து வரும் பொருளாதார சுமைகளை குறைக்கும் ஒரு தீர்வாக தற்சார்பு பொருளாதாரம் குறித்து தற்சமயம் அறிஞர்களின் பார்வை திரும்பியிருக்கிறது. தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் பண்டைய கோட்பாடு புத்துயிர் பெற்றிருக்கிறது.… Continue reading நகரங்களிலும் மண்புழு உரம் தயாரிக்கலாம்!
சுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி!
சுயதொழில் செய்யவதற்கான தேடலில் நிறைய பேர் நம்முடைய தளத்திற்கு வருகை தருகிறார்கள். இமெயில் மூலமாகவும் சிறுதொழில் ஆலோசனை தேவை என்று ஆவலோடு கேட்கிறார்கள். சிறுதொழில் செய்ய விரும்புகிறவர்கள் அரசு தரும் பயிற்சிகளின் மூலமாக கற்றுக்கொள்வது பயனுள்ள வழி என்பதை சொல்ல விரும்புகிறோம். அரசின் சான்றிதழ் கிடைப்பதோடு, வழிகாட்டலும் வங்கி கடனும் இங்கே பயிற்சி எடுத்துக் கொள்வதன் மூலமாக சாத்தியப்படும். அந்தவகையில் மத்திய அரசின் MSME பல்வேறு சிறுதொழில் வாய்ப்புகளை அளிக்கிறது. மேலதிக தகவல்களைத் தருகிறார் தொழில் வளர்ச்சி இயக்கத்தின்… Continue reading சுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி!
ஃபேன்ஸி நகைகள் செய்யத் தேவையான பொருட்கள் கிடைக்கும் தமிழக ஊர்கள்!
ஃபேஷன் ஜுவல் செய்யத் தேவையான பொருட்கள் எங்கே கிடைக்கும் என்பது பலருக்கும் இருக்கும் கேள்வி இது. சென்னையில் பாரிமுனை பூக்கடை காவல் நிலையத்திற்கு பின்புறம் கோல்டு கவரிங் நகைகள் விற்கும் கடைகள், பேன்ஸி பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. அந்தக் கடைகளைத் தாண்டி வந்தால் பெருமாள் முதலி தெரு வரும். அந்தத் தெரு முழுக்க ஃபேஷன் ஜுவல்லரி தொடர்பான மணிகள், செட்கள் எல்லாம் கிடைக்கும். சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் ஏரியாவிலும் புதிய… Continue reading ஃபேன்ஸி நகைகள் செய்யத் தேவையான பொருட்கள் கிடைக்கும் தமிழக ஊர்கள்!
உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?
முன்பெல்லாம் ஒரு கலைப் பொருளை செய்தால், அதைச் செய்த நாமே அழகு பார்த்துக் கொண்டிருப்போம். விற்பனைக்கு அனுப்புவது பற்றியெல்லாம் நம்மால் யோசிக்கவே முடியாது. நாம் உருவாக்கிய கலைப் பொருள் போலவே நம்முடைய கனவுகளும் மூலைக்குப் போய்விடும். இந்த சூழல் இப்போது மெல்ல மெல்ல மாறிவருகிறது. அமைந்தகரையில் இருந்தபடியே நீங்கள் உருவாக்கிய பொருளை அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ விற்றுவிட முடியும். எப்படி என்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான ஆன்லைன் வர்த்தக மையத்தை ஏற்படுத்தியிருக்கிறது etsy.com.… Continue reading உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?