சின்னத்திரை, தொலைக்காட்சி நிகழ்வுகள்

புதிய தலைமுறையிலிருந்து பனிமலர் விலகல்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண்களில் பூங்குழலி , ராஜி, பனிமலர் இவர்களைத் தவிர சில பெண்கள் ஸ்டைலாக வாசிக்கிறேன் என்கிற பெயரில் வாயைக் கோணலாக வைத்துக் கொண்டு செய்து வாசிப்பது சகிக்கவில்லை. பெயர் குறிப்பிட்டு அவர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. நான்கைந்து பேர் அப்படித்தான் வாசிக்கிறார்கள். வாய்க்குள் ஏதோ அடைத்துக்கொண்டு வாசிப்பது போல பார்ப்பவர்களுக்கு சங்கடத்தை தரும் இந்த பாணியை கைவிட்டால் வரவேற்கலாம். பொதிகையில் அழகான உச்சரிப்பில் செய்தி வாசிக்கும் பெண்களை பார்க்கும்போது உண்மையில் அவர்கள்மேல்… Continue reading புதிய தலைமுறையிலிருந்து பனிமலர் விலகல்

சினிமா, சின்னத்திரை, தொலைக்காட்சி நிகழ்வுகள்

நடிகை அமலாவின் சீரியல் எண்ட்ரி!

80களின் கதாநாயகியாக நடித்த தென்னிந்திய நடிகை அமலா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கும் உயிர்மெய் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் மருத்துவராக நடிக்கிறார் அமலா. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள அமலா, தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடிப்பது இதுவே முதல் முறை. ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலான, விலங்குகள் நல ஆர்வலரும்கூட.

சர்ச்சை, சினிமா, சின்னத்திரை, தமிழ்சினிமா, தொலைக்காட்சி நிகழ்வுகள், விஜய் தொலைக்காட்சி, விருது

விஜய்டிவி விருது விழாவில் பேசிய அனைத்தையும் ஒளிபரப்பினார்களா? இயக்குநர் ராம் விளக்கம்

விஜய் விடி விருது விழாவில் இயக்குநர் ராம் தங்கமீன்கள் படத்தில் நடித்த சிறுமிக்கு ஏன் விருது தரவில்லை என்று கேட்டது பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் கடந்த ஞாயிறு விஜய் டிவியில் விருது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. விருது விழாவில் பேசிய அனைத்தும் விடியில் ஒளிபரப்பானதா என்பது பற்றி நிறைய ரசிகர் கேட்டதால் தன்னுடைய முகப்புத்தகத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர் ராம்... ‘Director Ram பக்கத்திற்கு இப்போது வரை வந்த மின்னஞ்சல்கள், என் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவல்கள் மற்றும்… Continue reading விஜய்டிவி விருது விழாவில் பேசிய அனைத்தையும் ஒளிபரப்பினார்களா? இயக்குநர் ராம் விளக்கம்

சினிமா, சின்னத்திரை, தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள், விஜய் தொலைக்காட்சி

நிஜத்திலும் நடந்தது சரவணன் மீனாட்சி திருமணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில்  சரவணனாக நடித்த செந்திலுக்கும், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவுக்கு திருப்பதில் திருமணம் நடைபெற்றதாக நேற்று செய்திகள் வெளியாயின. இதுகுறித்து செந்திலிடம் கேட்டபோது திருமணம் நடந்தது உண்மை தான் என்று அறிவித்துள்ளார்.சென்ற புதன்கிழமை திருப்பதியில் இவர்களுடைய திருமணம் நடந்திருக்கிறது. கோயம்புத்தூரை சேர்ந்த செந்தில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இந்நிலையில் இருவருக்கும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்போது காதல் ஏற்பட்டதாகவும் பெற்றோர் சம்மததுடன் தற்போது திருமணம் நடந்ததாகவும் செந்தில் தெரிவிக்கிறார்.

சினிமா, தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள், பாலிவுட்\

சீரியலில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்!

இந்திய சினிமாவின் வாழும் நாயகனாக போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன் ஓய்வு இல்லாமல் தன்னுடைய 71 வயதிலும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பொது நிகழ்ச்சிகள் என இளம் வயது நடிகரைப் போல் பரபரப்பாகவே இருக்கிறார். தற்போது சோனி தொலைக்காட்சிக்காக யுத் என்கிற துப்பறியும் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரவு 10.30 மணிக்கு ஜூலை 14ம் தேதி முதல் இந்தத் தொடர் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தொலைக்காட்சி டாக் ஷோக்களை நடத்தியிருந்தாலும் அமிதாப் தொடரில் நடிப்பது… Continue reading சீரியலில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்!