தமிழ்மொழி, தொழிற்நுட்பம்

இணையவழியில் தமிழ் வளர்க்க ஆர்வம் உள்ளவரா?

தொழிற்நுட்பம் உலகெங்கும் வாழும் தமிழர், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழர்தம் கலை, இலக்கியம், பண்பாட்டுக்கூறுகளை இணையவழி முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழில் கணியன்கள்(மென்பொருட்கள்) உருவாக்குவது முதலான கணித்தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் இணையக்கல்விக் கழகம் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின், குறிப்பாக இளந் தலைமுறையினரின் தேவையை நிறைவு செய்யும் விதமாகவும் தகவல் நெடுஞ்சாலையில் கணித்தமிழை விரைந்து பயணிக்க வைக்கும் எதிர்காலத் திட்டங்களை வகுத்திடவும் தமிழ் இணையக் கல்விக்கழகம் எண்ணியுள்ளது. அதன் ஒரு… Continue reading இணையவழியில் தமிழ் வளர்க்க ஆர்வம் உள்ளவரா?

அறிவியல், இலக்கியம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்மொழி, புத்தகம்

த மு எ க ச வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை நீங்களும் வெல்லலாம்!

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கீழ்க்கண்ட பரிசுகளுக்கான நூல்கள் /தகடுகள் வரவேற்கப்படுகின்றன. 2013இல் அச்சாகி வெளியான நூல்கள் ஒவ்வொரு பரிசுக்கும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். குறும்பட ஆவணப்படங்களுக்கான பரிசுக்கும் 2013இல் வெளியான படங்களின் சிடி அல்லது டிவிடி இரு பிரதிகள் அனுப்ப வேண்டும். எழுத்தாளர்/இயக்குநர் மற்றும் பதிப்பாளர்/ படத் தயாரிப்பாளரின் முழு முகவரி தொலைபேசி எண்ணுடன் புத்தகங்களுடன்/தகடுகளுடன் எழுதி அனுப்பிட வேண்டுகிறோம். அனுப்ப வேண்டிய முகவரி: பொதுச்செயலாளர், தமிழ்நாடு… Continue reading த மு எ க ச வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை நீங்களும் வெல்லலாம்!

கவிதை, தமிழ்மொழி

தமிழில் ஹைக்கூ நாளிதழ்!

இந்தியாவில் முதன்முறையாக ஹைக்கூ நாளிதழ் தமிழில் வெளியாகியிருக்கிறது.  துளிப்பா நாளிதழ் ( haiku daily newspaper ) புதுச்சேரியில் பாஷோவின் 369 ஆவது பிறந்தநாளான 15.09.2013 காலை 10.10 க்கு (நீர் மகள்) ஆயி மண்டபத்தில் முதல் இதழ் வெளியிடப்பட்டது. இதழை புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி முதல்வர் எ.மு.இராசன் வெளியிட, கரந்தடி ஆசிரியர் சீனு.தமிழ்மணி மற்றும் மூவடி ஆசிரியர் கு.அ. தமிழ்மொழி பெற்றுக்கொண்டனர். நிகழ்வில் புதுவை இளங்குயில், மணிகண்டன், செந்தமிழினியன் மற்றும் துளிப்பா நாளிதழ் ஆசிரியர்கள்… Continue reading தமிழில் ஹைக்கூ நாளிதழ்!