சென்னை பெருமழை குறித்து எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்திருக்கிறார் இந்திய வானிலை மைய இயக்குனர் ரத்தோர். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “கடந்த அக்டோபர் 16-ஆம் தேதியே வழக்கத்தைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் அளவு அதிகமாக இருக்கும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தோம். அதுபோல 112 சதவிகிதம் அதிக மழை தமிழகத்தில் பொழிந்துள்ளது. இதுவரை 43.82 செ.மீ மழை தமிழகத்தில் பதிவாகியுள்ளது” என அவர் தெரிவித்திருக்கிறார்.
Category: தமிழ்நாடு
மழையை நாம் குறை சொல்லக்கூடாது…
இளமதி "இந்த வடகிழக்கு பருவமழையை ஒரு Disaster., பேரிடர்னு சொல்றாங்க. என்னை பொறுத்தவரைக்கும் இதை நான் பேரிடர்னு சொல்லமாட்டேன். இது ஒரு Resource..வளம். இந்த மாதிரி ஒரு பெருமழையை, ஒரு நாளில் 32செ.மீட்டர் மழை கிடைக்கிறது என்பதை ஒரு வளமாகத்தான் கவனிக்க வேண்டுமே தவிர, பேரிடர்னு சொல்லக்கூடாது. அதனால் நம்முடைய அணுகுமுறையே, பார்வையே தவறுன்னு நினைக்கிறேன். " தென்மேற்கு பருவமழை என்பது ஒரு ஜென்டில்மேன்…. அது ஒரு ஜென்டில் மேனர்லி சீஸன். ஆனால் வடகிழக்கு பருவமழை என்பது… Continue reading மழையை நாம் குறை சொல்லக்கூடாது…
வெள்ளம் புகுந்த சென்னை தி.நகர் பகுதி: வீணான உணவுப் பொருட்கள்
சென்னை அடையாறு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதால் சென்னை தியாகராயர், சைதாப்பேட்டை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வியாழக்கிழமை வெள்ளம் வடிந்த நிலையில், வெள்ளம் மூழ்கடித்ததால் தி.நகர் வியாபாரிகள் பலத்த பொருட்சேதத்தை சந்தித்தனர். ஒரு புறம் உணவுப் பொருட்கள் இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில், மற்றொரு புறம் வெள்ளத்தால் உணவுப் பொருட்கள் வீணாகியுள்ளன. https://youtu.be/aCpJ05Vl7sE
வெள்ளக்காடான சென்னை நகரம்!
கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறிவருகிறது. இந்நிலையில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மதுவிலக்குக் கேட்டுப் போராடிய மாணவர்களுக்கு அடி, உதை,சிறை தண்டனை!
காந்தியவாதி சசிபெருமாள் மறைவிற்குப் பிறகு, தன்னெழுச்சியாக தமிழகத்தின் பல இடங்களில் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மதுவிலக்கு கோரிக்கைக்கு பலத்தை சேர்த்திருக்கிறது. மாணவர்களின் போராட்டத்துக்கு உத்வேகத்தைத் தந்தது பச்சையப்பா கல்லூரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினரின் போராட்டமே. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் இன்னமும் சிறையில் உள்ளார்கள். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர், அவர்களை சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறை, தங்கள் மீது… Continue reading மதுவிலக்குக் கேட்டுப் போராடிய மாணவர்களுக்கு அடி, உதை,சிறை தண்டனை!