சர்ச்சை, சினிமா, சின்னத்திரை, தமிழ்சினிமா, தொலைக்காட்சி நிகழ்வுகள், விஜய் தொலைக்காட்சி, விருது

விஜய்டிவி விருது விழாவில் பேசிய அனைத்தையும் ஒளிபரப்பினார்களா? இயக்குநர் ராம் விளக்கம்

விஜய் விடி விருது விழாவில் இயக்குநர் ராம் தங்கமீன்கள் படத்தில் நடித்த சிறுமிக்கு ஏன் விருது தரவில்லை என்று கேட்டது பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் கடந்த ஞாயிறு விஜய் டிவியில் விருது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. விருது விழாவில் பேசிய அனைத்தும் விடியில் ஒளிபரப்பானதா என்பது பற்றி நிறைய ரசிகர் கேட்டதால் தன்னுடைய முகப்புத்தகத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர் ராம்... ‘Director Ram பக்கத்திற்கு இப்போது வரை வந்த மின்னஞ்சல்கள், என் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவல்கள் மற்றும்… Continue reading விஜய்டிவி விருது விழாவில் பேசிய அனைத்தையும் ஒளிபரப்பினார்களா? இயக்குநர் ராம் விளக்கம்

சினிமா, தங்க மீன்கள், தமிழ்சினிமா

கோவா திரைப்பட விழாவில் தங்கமீன்கள்!

கோவாவில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தங்கமீன்கள் திரையிடப்பட்டது. திரையிடலுக்கு முன் நடந்த சிவப்பு கம்பள வரவேற்பில் படத்தின் இயக்குநர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதீஸ் குமார், நடிகைகள் பத்மப்ரியா, ஷெல்லி கிஷோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் தங்கமீன்கள் படத்தில் இடம்பெறும் மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்ற வசனத்தைப் பேசிய ராம் ‘தங்கமீன்கள் படம் இங்கே என்னை தமிழ் பேச வைத்திருக்கிறது’ என்று நன்றி கூறினார்.

சினிமா, தமிழ்சினிமா

மீண்டும் வெள்ளித்திரையில் பிசியாகும் நடிகர் அபிஷேக்

நடிகர், இயக்குனர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், சங்க நிர்வாகி இப்படி பலதுறைகளில் தனி முத்திரை பதித்து வருபவர் நடிகர் அபிஷேக். இவர் நடித்த முதல்படம் ‘மோகமுள்’ அந்த முதல் படமே தேசிய விருதை தட்டிச் சென்றது. பெரிய திரையில் கிடைத்த கதாபாத்திரங்களில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர். சின்னத்திரையில் அபிஷேக் ஏற்காத வேஷங்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு சின்னத்திரையிலும் தனக்கென தனிமுத்திரை பதித்தவர். சின்னத்திரை மூலம் மாநில விருது, கலைமாமணி விருது என பல விருதுகளை தனது நடிப்பின் மூலம்… Continue reading மீண்டும் வெள்ளித்திரையில் பிசியாகும் நடிகர் அபிஷேக்

சினிமா, சினிமா இசை, தமிழ்சினிமா, விஜய் சேதுபதி

ரம்மி படத்திற்காக மண்மணம் கமழும் பாடல்கள்: யுகபாரதி பெருமிதம்

விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் ரம்மி படத்தின் இசைப் பற்றி, இந்தப் படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கும் யுகபாரதி பெருமிதத்துடன் கருத்து சொல்லியிருக்கிறார். ’’வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தைத் தொடர்ந்து வெளிவர இருக்கும் ரம்மி திரைப்படத்தின் பாடல்களும் மண்மணம் கமழும் விதத்தில் அமைந்திருப்பதற்கு இயக்குநர் பாலகிருஷ்ணனின் ரசனையே காரணம். அனைத்துப் பாடல்களும் அருமையாக அமைவது ஒருகாலத்தில் வரம்போல இருந்தது. இப்போது  அதனை வெகு இயல்பாக செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வரிகள் புரிகின்றன. இசை தமிழ் அடையாளத்தோடு இருக்கிறது.… Continue reading ரம்மி படத்திற்காக மண்மணம் கமழும் பாடல்கள்: யுகபாரதி பெருமிதம்

’நையாண்டி’, சினிமா, தனுஷ், தமிழ்சினிமா, நஸ்ரியா

தனுஷ் – நஸ்ரியா நடிக்கும் ’நையாண்டி’ : பிரத்யேக படங்கள்

இயக்குநர் சற்குணம் அடுத்து இயக்கும் படம் தனுஷ் - நஸ்ரியா நடிக்கும் ’நையாண்டி’. பிரத்யேக படங்கள் இதோ...